states

தொடர் சரிவில் இந்தியாவின் ஏற்றுமதி!

இஇபிசி, எப்ஐஇஒ அமைப்புக்கள் எச்சரிக்கை

புதுதில்லி, செப்.8- வளர்ந்த நாடுகளில் இந்தியப் பொருள்களுக் கான தேவை குறைந்து, அது ஏற்றுமதியில் கணிசமான சரிவை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச பொருளாதாரத்தில் நிலவி வரும்  நிச்சயமற்ற தன்மை காரணமாக அடுத்து வரும் மாதங்களிலும் இந்தியாவின் ஏற்றுமதி எதிர்பார்த்தைவிட குறைவாகவே இருக்கும் என்று சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போரின் காரணமாக, உலக நாடுகளிள் இடையிலான வர்த்தகம் 2022-ஆம் ஆண்டில் 4.7 சதவிகிதம் வளர்ச்சியடையும் என்று  உலக வர்த்தக அமைப்பு (World Trade Organization - WTO) கடந்த ஏப்ரலில் வெளி யிட்ட கணிப்பில் கூறியிருந்தது. ஆனால், தற்போது அது 3 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி யடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2022-ஆம் ஆண்டின் இரண்டாவது காலா ண்டில் (ஏப்ரல்-ஜூன்) ‘ஜி-20’ நாடுகள் இடை யேயான வர்த்தக வளர்ச்சி, மதிப்பு கணிசமாக குறைந்துள்ளதாக, வளர்ச்சியடைந்த நாடு களின் கூட்டமைப்பான பொருளாதார ஒத்து ழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பும் (Organisation for Economic Co-operation and Development - OECD) தெரிவித்துள்ளது. இந்தப் பின்னணியிலேயே, இந்தியாவின் ஏற்றுமதியிலும் சரி

உலகளாவிய பணவீக்கம், ரஷ்யா - உக்ரைன் போர், சீனா - தைவான் இடையிலான பதற்றம், விநியோகப் பிரச்சனைகள் ஆகி யவை உலகளவில் பொருளாதார வளர்ச்சி யை பாதிக்கின்றன. இது, இந்தியப் பொருட் களுக்கான தேவையிலும் பாதிப்பை ஏற்படுத்து கிறது என்று தெரிவிக்கின்றனர். இந்தியப் பொருட்களின் ஏற்றுமதி சரிவால்,  நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை அதிகமாகும்.  இது டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பில் பாதிப்பை ஏற்படுத்தும்; வேலைவாய்ப்புகளை யும் பாதிக்கும் என்று சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில், நாட்டின் சரக்கு  ஏற்றுமதி 1.15 சதவிகிதம் குறைந்து 3,300 கோடி டாலராக இருந்தது. வர்த்தகப் பற்றாக்குறை இரண்டு மடங்காக அதிகரித்து 2,868 கோடி டாலராக இருந்தது.

ஆகஸ்ட் மாத ஏற்றுமதியில் எதிர்மறை வளர்ச்சியைப் பதிவு செய்த முக்கியதுறை களில் பொறியியல், ரத்தினங்கள் மற்றும் ஆபர ணங்கள், ஆயத்த ஆடைகள், பருத்தி பொருள் கள் மற்றும் துணிவகைகள், பிளாஸ்டிக் பொருள் கள் ஆகியவை அடங்கும். ஆனால், 2021-22-இல் நாட்டின் மொத்த ஏற்றுமதி மதிப் பான 41 ஆயிரத்து 900 கோடி டாலரில், 25 சத விகிதத்திற்கும் மேலானவை இதே பொறி யியல் தயாரிப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். தற்போது 2022 ஆகஸ்ட் மாதத்தில் இவற்றின் ஏற்றுமதி தொடர்ந்து இரண்டாவது மாதமாக சுமார் 14.5 சதவிகிதம் சரிந்து 825 கோடி டாலராக குறைந்துள்ளது. அதே போல், ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களின் ஏற்றுமதியும் 4 சதவிகிதம் சரிந்து 330 கோடி டாலர் மதிப்புக்கு இறங்கி யுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் பிளாஸ்டிக்குகளின் ஏற்றுமதி மட்டுமே 1.47 சதவிகிதம் அதிகரித்து 74.45 கோடி டாலராக இருந்துள்ளது. இதுதொடர்பாக கூறியிருக்கும், பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் (Engineering Export Promotion Council India - EEPC), “பல்வேறு சர்வதேச காரணி களால் தங்களது துறையைச் சேர்ந்த பொருட் களின் ஏற்றுமதி வளர்ச்சி கடந்த சில மாதங் களில் குறைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளது. “சர்வதேசச் சந்தையில் தற்போதைய போக்கு தொடர்ந்தால் வரும் செப்டம்பர் - நவம்பர் காலம் ஏற்றுமதிக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும்” என்று இந்திய ஏற்றுமதி நிறு வனங்கள் கூட்டமைப்பின் (Federation of Indian Export Organisations - FIEO) இயக்கு நர் அஜய் சஹாயும் எச்சரிக்கிறார். ‘நாம் நிலைமையை கவனமாக கண்கா ணிக்க வேண்டும். குறைந்த மதிப்புள்ள பொருட் களுக்கான தேவை உள்ளது. ஆனால் அதிக மதிப்புள்ள பொருட்களுக்கு போதுமான தேவை இல்லை’ என்று அவர் கூறுகிறார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பருத்தித் துணி கள், முந்திரி, பீங்கான் பொருள்கள், எண்ணெய் உணவுகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள், இரும்புத் தாது போன்றவற்றின் ஏற்றுமதியும் சரிவைச் சந்தித்திருப்பதாக துறை வட்டா ரங்கள் தெரிவிக்கின்றன.

;