states

ஆன்லைன் ரம்மி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

புதுதில்லி, செப்.9- தமிழக அரசும் ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளை யாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் 21-ஆம் தேதி சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஜங்லி கேம்ஸ், பிளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு கள் தொடர்ந்தன. இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3-ஆம் தேதி, தமிழக அரசு கொண்டு  வந்துள்ள இந்த சட்டம், அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்று  கூறி சட்டத்தை ரத்து செய்தது.  சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு  சார்பில் உச்சநீதிமன்றத்தில்  மேல் முறையீடுசெய்யப்பட்டது.இந்த மேல்முறையீட்டு மனு வெள்ளியன்றுஉச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அனிருத் போஸ், மற்றும் விக்ரம் நாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது.  அப்போது, தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதாடினார். முழுக்க முழுக்க மக்களின் நலனுக்காகவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. எனவே ரம்மி விளையாட்டிற்கு தடை விதித்து தமிழக அரசு  கொண்டுவந்த சட்ட திருத்தத்திற்கு உயர்நீதிமன்றம் விதித்த தடை யை நீக்கி உத்தரவிட வேண்டும்” என வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து ஆன் லைன் ரம்மி விளையாட்டு நிறுவனங்  கள் 4 வாரங்களில் பதில் அளிக்குமாறு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், வழக்கை 10 வாரங்களுக்கு தள்ளிவைத்தது. ஆன்லைன் ரம்மி விளையாட்டை ஊக்குவித்து வந்த ஜங்லிகேம்ஸ், பிளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் போன்ற நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல் அகில இந்திய ஃபெடரேஷன் ஆப் கேமிங் என்ற அமைப்பிற்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.