states

முன்னாள் முதல்வரை குற்றவாளியாக சேர்த்து அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்திடுக!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சென்னை, அக்.19- தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் முன்னாள்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை யும் குற்றவாளியாக சேர்த்து - அனைவர் மீதும் உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது குறித்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வரவேற் கிறது. அறிக்கையில் குற்றம்சாட்டப் பட்டுள்ள, மாவட்ட ஆட்சித்தலைவர், வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது துறைவாரியான நடவடிக்கைகள் எடுப்பதுடன் உரிய குற்றவியல் நடவடிக்கைகளும் எடுக்கப் பட வேண்டும். அத்துமீறி கொலை செய்வது, உயர் அதிகாரிகளின் ஆணைப் படி செய்யப்பட்டாலும் கூட கொலைக் குற்றமாகவே கருதப்பட வேண்டும்.  எனவே போராடிய மக்களின் மீது சட்டத்திற்கு புறம்பாக  துப்பாக்கிச் சூடு  நடத்தி பலரது மரணத்திற்கும், பலரது உடல் உறுப்புகள் சேதப்படுத்தப்பட்ட தற்கும், பலர் மீதான பொய் வழக்கு களுக்கும் காரணமாக இருந்த காவல் துறை அதிகாரிகள், அந்த குற்றங் களுக்கு உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நட வடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.  

இத்தகைய உயிரிழப்புகளுக்கும், அமைதி குலைவிற்கும், முதலீட்டுச் சூழல் பாதிக்கப்பட்டதற்கும் அன்றைய அதிமுக அரசு மற்றும் அப்போதைய முத லமைச்சர் எடப்பாடி பழனிசாமி முழு மையாக பொறுப்பேற்க வேண்டும்.  எனவே, முற்றிலும் பொறுப்பற்ற முறையில் தனக்கு எதுவும் தெரியாது என்று ஊடகச் சந்திப்பில் அப்பாவி போல பேசி, இந்த குற்றங்களிலிருந்து தப்பிக்க அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முயற்சித்துள்ளார். தனது பொறுப்பினை மூடிமறைக்கும் நோக்கிலேயே எடப்பாடி அரசு கடைசி  வரை துப்பாக்கிச் சூட்டுக்கு பொறுப்பான வர்கள் மீது சிறு நடவடிக்கை கூட மேற்கொள்ளாமல் அவர்களை பாது காத்து வந்துள்ளது. 

எனவே, எடப்பாடி பழனிசாமி இக்குற்றங்களுக்கு முழு பொறுப்பாக்க ப்பட்டு குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை யினர் மற்றும் காவல்துறையினர், இத்தனை வன்மத்தோடு முன்னெடுத்த தாக்குதலுக்கும், தங்களுடைய வரம்பை மீறிச் செயல்பட்டதற்கும் நோக்கங்களும் காரணங்களும் உள்ளன.  உச்சநீதிமன்றத்தில் மாவட்ட நிர்வா கத்தின் சார்பில் 2012-13 இல் மாவட்ட  ஆட்சித்தலைவராக இருந்த ஆஷிஸ்குமார் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை உச்ச நீதிமன்றம் ‘இது மாவட்ட நிர்வாகத்தின் பிரமாண பத்திரமா, ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் பிரமாண பத்திரமா’ என்று கேள்வி எழுப்பி, வேறு பிரமாண பத்திரம் தாக்கல் செய்திட பணித்ததை நினை வூட்ட விரும்புகிறோம்.

ஸ்டெர்லைட் தலையீட்டை கண்டுகொள்ளாத ஆணையம்

எனவே, அதிகாரிகள் தவறு இழைப்பதற்கும், வரம்பினை மீறி செயல்பட்டதற்கும் ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் பின்னணியும், தலை யீடும் இல்லையென்பதற்கான வாய்ப்பு களே இல்லை. அத்தகைய ஸ்டெர்லைட்  நிர்வாகத்தை பற்றி, நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை கண்டும் காணா மல் இருப்பது சரியல்ல. ஸ்டெர்லைட் உட்பட, மாநிலத்தின் பிற பகுதிகளில் இயங்கிக் கொண்டிருக்கும் பல பன்னாட்டு, உள்நாட்டு பெரு நிறுவன ங்கள், சம்பந்தப்பட்ட அரசுத்துறை களை தங்களுடைய கட்டுக்குள் கொண்டு வந்து சட்டத்தை மீறி செயல்படுவது வழக்கமாக மாறியுள்ளது.  எனவே இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமலிருக்க தமிழ்நாடு அரசு தேவையான, சட்டப்படியான நட வடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

ரஜினிகாந்த் வருத்தம்  தெரிவிக்க வேண்டும்

மக்கள் தங்கள் அனுபவத்திலிருந்து போராடிக் கொண்டிருந்த போது, பொருத்தமற்ற முறையில் அரசியல் மற்றும் சுயநல நோக்கில் இருந்து 4 காவல்துறையினரை தாக்கிய பிறகு தான் காவல்துறையினர் திருப்பித் தாக்கி னார்கள்’ என்று பேசிய திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பிற பிர பலங்கள் எதிர்காலத்தில் இத்தகைய தேவையற்ற கருத்துக்கள் வெளியிடு வதை தவிர்க்க வேண்டும். ரஜினிகாந்த் தமிழ்நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

ஸ்டெர்லைட்டின்  அப்பட்ட விதிமீறல்கள்

துப்பாக்கிச் சூடு என்று மட்டும் இந்த சம்பவத்தை தமிழக அரசு தனித்துப் பார்க்கக் கூடாது. ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே சுற்றுச்சூழல், தொழிலாளர் நலன் உள்ளிட்ட பல்வேறு விதி மீறல்களை அப்பட்டமாக மேற்கொண்டு, சட்ட இதுமட்டுமல்லாமல், ஊர்வலமாக வந்த மக்கள்மீது அதிகாரத்தை அத்துமீறிப் பயன் படுத்தி கலைப்பதற்கு திட்டமிட்டார்கள். துப்  பாக்கிச் சூடும் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதை அருணா ஜெகதீசன் ஆணையம் உறுதி செய்து அறிக்கை கொடுத்திருக்கி றது. அந்தச் சம்பவத்திலே 11 ஆண்கள், 2 பெண்கள் என 13 பேர் துள்ளத்துடிக்க பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். 40 பேர் பலத்த காயங்களை அடைந்தார்கள். 64 பேர் சிறிய அளவிலான காயங்களை அடைந்தார்கள்.

கடந்த அதிமுக ஆட்சியின் அன்றைய முதல்வர் பழனிசாமியின் எதேச்சதிகார நினைப்புக்கு எடுத்துக்காட்டாக இந்தச் சம்பவம் அமைந்துள்ளது. அதாவது, அதி முக ஆட்சியின் ஆணவத்துக்கு தூத்துக்குடி யில் இத்தனை உயிர்கள் பலியானது. கேட்ப வர் அனைவருக்கும் ரத்தம் உறைய வைக்  கக்கூடிய இந்தச் சம்பவம் குறித்து, அன்றைய முதல்வர் பழனிசாமியிடம் ஊடகங்கள் கேட்ட போது, ‘இப்படி ஒரு சம்பவம் நடந்ததே எனக்குத் தெரியாது; உங்களைப் போல  நானும் டி.வி. பார்த்துத்தான் தெரிஞ்சுக் கிட்டேன்’ என்று பேட்டி அளித்ததை யாரும் மறந்திருக்க முடியாது. ‘உள்துறையை கையில் வைத்திருந்த முதலமைச்சர் பேசும் பேச்சா இது?’ என்று நாடே கோபத்தால் கொந்தளித்தது. அந்தள வுக்கு மிகப் பெரிய, உண்மைக்கு மாறான தகவலை தற்போதைய எதிர்க்கட்சித் தலை வராக இருந்தவர் பேசியிருக்கிறார். இரண்டு ஆணையமும் திமுக அரசால் அமைக்கப்பட்டது அல்ல. அதிமுக அரசு அமைத்த ஆணையம்தான். ஒருவேளை அதை நாம் அமைத்திருந்தால், இதில் அரசி யல் இருக்கிறது என்றுகூட சொல்லியிருக்க லாம். ஆனால், அதிமுக அமைத்த ஆணை யமே சொல்லியிருக்கிறது.

இதற்கு இந்த ஆணையத்திடம் மிக வலு வாக இருக்கும் ஆதாரம் என்னவென்றால், சாட்சியாக விசாரிக்கப்பட்ட அன்றைய தலை மைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டி.ஜி.பி. ராஜேந்திரன், உளவுத் துறை ஐ.ஜி சத்தியமூர்த்தி ஆகியோர் தூத்துக்குடியில் நடக்கும் சம்பவங்களையும், அங்குள்ள நில வரங்களையும் நிமிடத்துக்கு நிமிடம் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்து வந்த தாகக் கூறினார்கள். எனவே, ஊடகங்கள்  மூலமாகத்தான் அந்தச் சம்பவம் பற்றி தெரிந்து கொண்டதாக அவர் கூறியது தவறான கருத்து என்பது ஆணையத்தின் கருத்தாகும். இது ஆணையத்தின் அறிக்கை யில் மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைக்கப்  பட்ட ஆணையமே, இதனை உறுதிப்படுத்தி இருக்கிறது. கொடூரமான கொலைவெறித் தாக்குதல் தொடர்பாக நேரடி வர்ணனை களை தனது அறையில் உட்கார்ந்து கேட்டு விட்டு, வெளியில் வந்து ‘எனக்கு எதுவும் தெரி யாது’ என்று சொன்னவர்தான் அன்றைக்கு முதல்வராக இருந்த பழனிசாமி. இதற்கான தண்டனையின் தொடக்கத்தைத்தான் சட்ட மன்ற தேர்தல் தோல்வி மூலமாக அதிமுக வுக்கு தமிழ்நாட்டு மக்கள் வழங்கினார்கள்.

கூடுதலாக ரூ.5 லட்சம் 

ல் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்ப டையில் அரசு பல நடவடிக்கைகளை எடுத்தி ருக்கிறது.  கலவரத்தில் ஈடுபடாத நபர்கள் மீது பதிவுசெய்யப்பட்ட 38 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன. போராட்டத்தின்போது காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்ட 93 நபர்களுக்கு, அந்த நபர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனுபவித்த மனவேதனைகளைக் கருத்தில் கொண்டு, 1 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்  கப்பட்டது. மேலும், துப்பாக்கிச் சூட்டில் உயி ரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு, ஏற்கெ னவே வழங்கிய நிதியோடு, மேலும், கூடுத லாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும். ஆணையத்தின் அறிக்கையில் தெரி வித்திருந்த கருத்துக்கள், பரிந்துரைகளை அரசு கவனமாக பரிசீலனை செய்தது; இன் னும் பரிசீலனை செய்து கொண்டிருக்கிறது. கலவரம் ஏற்பட்டதற்கான காரணங்கள், கல வரத்தை கையாண்ட முறை, கலவரத்திற்குப் பிறகு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த  ஆணையத்தின் முடிவுகள் மற்றும் பரிந்துரை கள் அரசால் ஆய்வு செய்யப்பட்டன.

தொடங்கியது நடவடிக்கை...

இச்சம்பவத்தில் தொடர்புடைய சில அலு வலர்கள்மீது துறைரீதியான நடவடிக்கை களை எடுப்பதற்கான அந்தப் பணிகளைத் தொடங்கியிருக்கிறோம். அதன்படி, தூத் துக்குடி மாவட்டத்தின் அப்போதைய ஆட்சி யர்மீது, துறைரீதியான நடவடிக்கை பொதுத்  துறை மூலமாக எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், வருவாய் மற்றும் பேரிடர் மேலா ண்மைத் துறையினை சேர்ந்த மூன்று வருவாய் துறை அதிகாரிகள்மீது தமிழ்நாடு  குடிமைப் பணிகள் விதிகளின் கீழ் துறைரீதி யான ஒழுங்கு நடவடிக்கை துவங்கப்பட்டுள் ளது. உள்துறை மூலமாக, அப்போதைய தென்  மண்டல காவல் துறைத் தலைவர், திரு நெல்வேலி சரக காவல் துறை துணைத் தலை வர், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர், ஒரு காவல் துணைக் கண்கா ணிப்பாளர், மூன்று ஆய்வாளர்கள், ஒரு  சார்-ஆய்வாளர் மற்றும் 7 காவலர்கள் மீது  ஒழுங்கு நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்  ளன. இதில் நேரடியாக ஈடுபட்ட ஒரு ஆய்வா ளர் உட்பட 4 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் இந்த அவையினுடைய கவனத்திற்கு நான் கொண்டுவர விரும்புகிறேன். இந்த ஒழுங்கு  நடவடிக்கைகள் அனைத்திலும் விரைவாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு முடிவுக்குக் கொண்டுவரப்படும். அதிகாரமும், சட்டமும் மக்களைக் காக்  கவே என்பதை அனைவரும் உணர வேண்டும். எனவே, யார், யார் குற்றவாளி களோ, அவர்களெல்லாம் நிச்சயமாக கூண்  டில் ஏற்றப்படுவார்கள், தண்டிக்கப்படு வார்கள். இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.

 

;