states

மயிலாடுதுறை, காரைக்கால் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது

மயிலாடுதுறை, செப்.7-  எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி  மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 12 மீன வர்களை இலங்கை கடற்படை கைது  செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த செப்.2 அன்று இரவு 11 மணிக்கு காரைக் கால் கீழகாசாக்குடி சுனாமி நகரை சேர்ந்த  உலகநாதன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் காரைக்கால் மாவட்டம், கீழகாசாக்குடி மேட்டை சேர்ந்த மணி வண்ணன், செல்வமணி, அசோக், கார்த்தி கேயன், சுனில், செல்வம், மண்டபத்தூர் சுதன் மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் சின்னூர்பேட்டை சக்திவேல், தரங்கம்பாடி பாலமுருகன், புதுப்பேட்டை ரமேஷ், பாண்டித்துரை, பூம்புகாரை சேர்ந்த சஞ்சய் ஆகிய 12 பேர் மீன்பிடிக்க கட லுக்குச் சென்றுள்ளனர். இந்திய எல்லையை கடந்து இலங்கை  முல்லைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த தாக 12 மீனவர்களை இலங்கை கடற்படை யினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் சென்ற விசைப்படகும் கடல்  படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள் ளது. இதுகுறித்து மாவட்ட கடல்சார் சட்ட  அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் வெர்ஜி னியா மற்றும் தரங்கம்பாடி கடற்கரை காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிரா மங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.