states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சூரியன், நிலவு, செவ்வாய் கிரகத்தை தொடர்ந்து வெள்ளிக் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பப் படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. வெள்ளி கிரகத்திற்கான “சுக்கிரயான் திட்டம்” குறித்து விரை வில் அறிவிப்பு வெளியாகும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல மோசடி மன்ன னும், பாஜக பிரமுகருமான நாகராஜ் சாகர், தான் வாடகைக்கு இருந்த வீட்டை தனது சொந்த வீடு என கூறி ராணுவ மேஜரிடம் ரூ.1 கோடி மோசடி செய்த விவகாரத்தில் சனியன்று கைது செய்யப்பட்டார்.

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் மதிப்பெண் குளறுபடி தொடர்பான புகார்கள் எழுந்துள்ள நிலையில், நீட் தேர்வில் எந்த முறைகேடும் அரங் கேறவில்லை என தில்லியில் ஒன்றிய உயர் ்கல்வித்துறை செயலாளர் சஞ்சய் மூர்த்தி கூறியுள்ளார்.

“வி.கே.பாண்டியன் தனது அரசியல் வாரிசு அல்ல. ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் தோல்வியடைந்ததற்கு அவர் காரணம் அல்ல” என ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் விளக்கம் அளித்துள்ளார். 

“இனி வரும் தேர்தல்களில் எந்த கட்சி வெற்றி பெறும் என கணிப்பு சொல்வேனே தவிர, எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என கணிக்க மாட்டேன்” என பிரபல தேர்தல் வியூக கணிப்பாளர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.