சென்னை, ஜூலை 21- தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னையில் வெள்ளியன்று (ஜூலை 21) அமைச்சர் பொன்முடி தலைமையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது:- உயர்கல்வி துறையின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தரத்தை உலகளவில் உயர்த்த வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் கொண்டு வரப்படும். இதனால், கல்லூரிகளி லிருந்து வேறு கல்லூரிக்கு மாறும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்க ளுக்கு உதவியாக இருக்கும். காலியாக உள்ள பல்கலைக் கழகங்களின் பதிவாளர்கள், தேர்வுக் கட்டுப்பாட்டாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும். கல்லூரிகளில் காலியாக இருக்கும் 4,000 உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும். கவுரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப் படும் ஊதியம் ரூ.20 ஆயிரம், இனி ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும் இவ்வாறு அமைச்சர் தெரிவித் தார்.