states

உலகச் செய்திகள்

ரஷ்யாவின் கவலைகளை அமெரிக்கா தலைமையி லான ராணுவக் கூட்டணியான நேட்டோ அலட்சியப் படுத்தினால் பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் எச்சரித்துள்ளார். இது குறித்து செய்தி யாளர்களிடம் பேசிய அவர், தேவைப்பட்டால் ராணுவ ரீதியான பதிலடியாகவும் அது இருக்கும். ஆனால், தற்போதுள்ள நிலைமையை பேச்சுவார்த்தை மூலமாக தீர்த்துக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்த வேண்டிய  பொருளாதாரத் திட்டங்கள் மற்றும் எதற்கு முன்னு ரிமை தர வேண்டும் என்பது குறித்த விவாதம் கியூபா நாடாளுமன்றத்தில் துவங்கியுள்ளது. கியூபாவின் அந்நிய வர்த்தகம் மற்றும் அந்நிய முதலீட்டுத்துறை உரு வாக்கியுள்ள குறிப்பை முன்வைத்து இந்த விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்நிய முதலீடு குறித்த மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசரத் தேவை உள்ளது என்று விவாதத்தைத் துவக்கி வைத்த கியூபாவின் ஜனாதிபதி மிகேல் டியாஸ் கானெல் குறிப்பிட்டார்.

கோவிட் 19ன் நான்காவது அலை துவங்கி யுள்ளதாக ஜாம்பியா அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வெறும் 609 பேர்தான் பாதிக்கப் பட்டுள்ளனர் என்றாலும், தற்போது ஒமைக்ரான் பரவி யுள்ளதால்தான் நான்காவது அலை என்று கூறியுள்ள னர். கடந்த 24 மணிநேரங்களில் உயிரிழந்த 5 பேரில் இரண்டு குழந்தைகள் என்பது கவலையளிப்பதாக ஜாம்பியாவின் சுகாதாரத்துறை அமைச்சர் மசேவோ குறிப்பிட்டுள்ளார்.

;