சென்னை, ஜூலை 7- தமிழ்நாட்டில் மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத் தின் கீழ் யாருக்கெல்லாம் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற தகுதிகளை தமிழ்நாடு அரசு வெள்ளியன்று (ஜூலை 7) வெளி யிட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள ஏராள மான மகளிரால், அதிகம் எதிர்பார்க் கப்படும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான தகுதிகள் அறிவிக்கப் பட்டிருப்பதன் மூலம், யாருக் கெல்லாம் உரிமைத் தொகை கிடைக்கும், கிடைக்காது என்பது தெளிவாகியிருக்கிறது. அதன்படி, தமிழ்நாடு அரசு வெளி யிட்டிருக்கும் தகுதிகளில், மகளி ருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம், நிகழ் நிதி யாண்டுக்கான நிதிநிலை அறிக்கை யில் அறிவிப்பாக வெளியிடப்பட் டுள்ளது. மேலும், இந்தத் திட்டம் குறித்து சட்டப்பேரவை யில் விளக்கம் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் அவரவர் வங்கிக் கணக்கில் தொகை நேரடியாகச் செலுத்தப்படும் எனவும், நடைபாதையில் வணிகம் செய்வோர், மீனவ மகளிர், கட்டு மானத் தொழில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள், வணிகம் மற்றும் சிறு தொழில் நிறுவனங்களில் மிகக் குறைந்த ஊதியம் பெறுவோர், ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட இல்லங்க ளில் பணிபுரியக்கூடிய பெண்கள் ஆகி யோருக்கு உதவித் தொகை அளிக் கப்படும் எனவும் அறிவித்திருந்தார். உரிமைத் தொகையை சுமார் ஒரு கோடி மகளிருக்கு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
சிறப்பு முகாம்கள்
ரூ.1,000 உரிமைத் தொகையை யாருக்கெல்லாம் வழங்குவது, எப்படி கணக்கெடுப்பு நடத்துவது என்பன குறித்த வழிகாட்டி நெறிமுறைகள் தயாரிக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் திட்டத்துக்கான சிறப்புப் பணி அதிகாரியாக இளம் பகவத் ஏற்கெனவே நியமிக்கப்பட் டுள்ளார். உரிமைத் தொகையைப் பெற யாரெல்லாம் தகுதியான மகளிர் என்பதை அடையாளம் காணவும், அவர்கள் குறித்த விவரங்களைச் சேகரிக்கவும் தமிழ்நாடு அரசு பணி களைத் தொடங்கியிருக்கிறது. இதற்காக மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்களை நடத்த ஏற்பாடு கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களை மாநிலத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடை களுக்கு அருகிலேயே அமைத்திட வும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் வருவாய்த் துறை அலுவலர்களைக் கொண்டு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த முகாம்களுக்கான ஏற்பாடுகளை மாநகராட்சி, நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள் செய்து தர வேண்டுமென தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த முகாம்களின் மூலம், பெண்களிடம் இருந்து உரிய தகவல்கள் கேட்டுப் பெறப்பட உள்ளன. குறிப்பாக, எந்த வகை குடும்ப அட்டை வைத்துள்ளனர், ஆதார் எண், குடும்ப உறுப்பி னர்களின் தொழில் உள்ளிட்ட அடிப்படை விவரங்கள், வங்கிக் கணக்கு எண் போன்றவை கோரப் பட உள்ளன.
இதுகுறித்து, தமிழக அரசுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:- மகளிர் உரிமைத் தொகைக் கான விவரங்களைப் பெற ஒட்டு மொத்தமாக ஓரிடத்தை நிர்ணயித்தால் விவரங்கள் பெறுவதில் சிக்கல் ஏற்படும். இதனால், நியாயவிலைக் கடைகளில் மக்கள் பொருள்கள் வாங்க வருவது போன்று வந்து விவ ரங்களைத் தந்தால் எளிதாக இருக் கும் என முடிவு செய்யப் பட்டுள்ளது. இத னால், ஒவ்வொரு நியாயவிலைக் கடைக்கும் அருகிலேயே சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளன. மக்கள் தாங்கள் பொருள்கள் வாங்கும் நியாய விலைக் கடைக்கு அருகில் அமைக்கப்படும் முகாமுக்கு சென்று விவரங்களை அளிக்கலாம். நீண்ட வரிசை ஏற்படும் நிலையில், அவர்களுக்கான குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளைச் செய்து தர உள்ளாட்சி அமைப்புகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. வழிகாட்டு நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு, சிறப்பு முகாம்களில் விவரங்கள் பெறப் படும் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த முகாம்களை அடுத்த வாரத்தில் இருந்து தொடங்க முடிவு செய்திருப்பதாகவும் தக வல்கள் கூறுகின்றன. ரேசன் அட்டை எந்த கடையில் இணைக்கப்பட்டுள்ளதோ அந்த கடையில் விண்ணப்பிக்க வேண்டும். பெண் அரசு ஊழியர்களுக்கு கிடைக்காது. பெண் சட்டமன்ற, மக்களவை, மாநிலங்களவை உறுப்பி னர்கள் குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படாது.
ஆண்டுக்கு இரண்டு லட்சம் ரூபாய் மேல் வருமானம் பெறும் குடும்பத் தலைவிகள், சொந்தமாக கார் மற்றும் ஐந்து ஏக்கர் நிலம் வைத்திருக்கும் குடும்ப தலைவிகளுக்கு கிடையாது. 3 ஆயிரத்து 500 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பத் தில் உள்ள குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படாது. இந்த மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தைச் செயல்படுத்த முதலில் தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளன. இதற்கான பணியில் இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்கள் ஈடு படுத்தப்பட உள்ளனர். அவர்களுக் கென பிரத்யேக செயலி வழங்கப் படும். இந்த செயலில் பயனாளிகள் குறித்த விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும். மேலும், பயனாளிகளின் உண்மைத் தன்மையை அறிய நியாய விலைக் கடையில் உள்ளது போன்று பயோ மெட்ரிக் கருவி வழங்கப்படும். இந்த கருவியின் மூலமாக, குடும்ப அட்டைதாரர் குறித்த உண்மை நிலை அறிந்து கொள்ளப்படும். ஒரு நியாய விலைக் கடையில் 500 குடும்ப அட்டைதாரர்கள் இருந்தால் அவர்களுக்கு பொறுப்பாக, ஒரு இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார் வலர் இருப்பார். ஆயிரம் அட்டை களாக இருந்தால், 2 பேரும், 1,500 அட்டைதாரர்களாக இருந்தால் மூன்று பேரும் பொறுப்பாக நியமிக்கப் படுவர். தமிழ்நாட்டில் மொத்தமாக 34 ஆயிரத்து 806 நியாய விலைக் கடை கள் உள்ளன. உரிமைத் தொகைக் கான விவரங்களைச் சேகரிக்கும் பணி யில் 61 ஆயிரத்து 893 இல்லம் தேடி திட்ட தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப் பட உள்ளனர்.