states

img

இந்து மதத்திற்கு மாறிய முஸ்லிம் பிரமுகர் ரிஜ்வீ!

உத்தரப் பிரதேச மாநில முஸ்லிம்களில் பெரும்பான்மையாக இருக்கும் ஷியா பிரிவின் முக்கியத் தலைவராகக் கருதப்பட்டவர் வாசிம் ரிஜ்வீ. உ.பி. ஷியா முஸ்லிம் வக்பு வாரியத்தின் தலைவராகவும் இருந்தவர். எனினும், குரானுக்கு எதிராகவும், பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டியே ஆக வேண்டும் என்று தொடர்ந்து இந்துத்துவா அமைப்புகளுக்கு ஆதர வாக பேசிவந்த அவர், பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளில், தற்போது இந்து மதத்திற்கே மாறியுள்ளார். காஜியாபாத்திலுள்ள தாஸ்னா மடத்தின் தலைவரான நரசிம்மானந் கிரி மஹராஜ், வாசிம் ரிஜ்வீக்கு பூணூல் அணிவித்து, பெயரையும் ஜிதேந்தர் நாராயண்சிங் தியாகி என மாற்றியுள்ளார்.