states

img

நெல்லையில் நிவாரண உதவி: கே.பாலகிருஷ்ணன், க.கனகராஜ் வழங்கினர்

திருநெல்வேலி, டிச.23- நெல்லை மாவட்டத்தில் கடந்த  17, 18 ஆகிய தேதிகளில் கொட்டிய  அதிகனமழையால் மாவட்டமே வெள்ளக் காடானது. ஏராளமா னோர் வீடுகளையும் உடைமை களையும் இழந்து தவித்து வரு கின்றனர். அவர்களுக்கு மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பல்வேறு பகுதிகளில் நிவா ரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு மழையால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பாய்,  போர்வை, அரிசிப் பை, பல சரக்குப் பொருட்களை மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செய லாளர் கே. பாலகிருஷ்ணன் வழங்கினார். நிகழ்ச்சியில் கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பி னர் க. கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி. பாஸ்கரன், மாவட்டச் செயலாளர் க. ஸ்ரீராம், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டத் தலைவர் பெருமாள், மாவட்டச் செயலாளர் முத்து மணி கண்டன் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.