states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

  1. மூன்று மாதங்கள் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கவில்லை என்றால் ரேஷன் கார்டு ரத்து  செய்யப்படும் என்பது வதந்தி என தமிழ்நாடு கூட்டு றவுத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
  2. ஈரானில் ஹிஜாப் அணியாததால் கை தான பெண் போலீஸ் காவ லில் மரணம் அடைந்தது தொடர்பாக நிகழ்ந்த போராட் டம் மற்றும் வன்முறையால் இதுவரை 17 பேர் உயிரிழந் துள்ளனர். வன்முறையால் தொடர்ந்து பதற்றம் நீடிப்ப தால் இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் செயலிகளுக்கு அந்நாட்டு அரசு தடை விதித் துள்ளது.
  3. காங்கிரஸ் தலை வர் என்பது வெறும் நிறுவன பதவி மட்டு மல்ல. அது ஒரு  நம்பிக்கை  அமைப்பின் கருத்தியல் பதவி என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார்.
  4. ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்குக் காக பிரதமர் நரேந்திர மோடி  செப்டம்பர் 27-ஆம் தேதி ஜப்பான் செல்கிறார்.
  5. உத்தரப்பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரான பிரோசா பாத் நகரமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வீடுகள், கார்கள் வெள்ளத்தில் மிதக் கும் நிலையில், இரட்டை இன் ஜின் பாஜக அரசு கண்டு கொள்ளாததால் அப்பகுதி மக்கள் வெள்ள நீரை தாங்க ளாவே அகற்றும் முயற்சி யுடன் ஈடுபட்டு வருகின்ற னர். ஆனால் அவர்களால்  உடனடியாக வெள்ளநீரை வெளியேற்ற முடிய வில்லை, கடுமையாக போராடி வருகின்றனர்.
  6. பணவீக்கத்தை கட்டுப்படுத்த பெட் ரோல், டீசல் விலையை குறைக்க ஒன்றிய நிதியமைச்சர் அறிவுறுத்தினார், ஆனால் அதற்கு முன்பாகவே தமிழ்நாடு அரசு  விலையை குறைத்துவிட்டது. மாநில அரசுக்கு  என்று சில பொருளாதார திட்ட நோக்கங்கள் உள்ளன. பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் சாமானிய மக்களின் வாங்கும் சக்தி  குறையாமல் பாதுகாக்க முடியும். முக்கியமாக  ஜிஎஸ்டி உள்ளிட்ட வரி விகிதங்கள் நியாய மான முறையில் இருக்கின்றனவா என்பதுதான்  தற்போதைய கேள்வி என தமிழ்நாடு நிதிய மைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியா ளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
  7. இந்து - சூத்திரர் கருத்து தொடர்பாக  திமுக எம்.பி. ஆ. ராசாவுக்கு மிரட்டல் விடுத்த கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மீது எஸ்.சி/ எஸ்.டி  வன்கொடுமை சட்டம் பாய்ந்தது.
  8. மகாராஷ்டிரா மாநிலம் தானே  மாவட்டத்திற்கு உட்பட்ட உலாஸ்நகர் நகரில் ஐந்து மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.
  9. முன்கூட்டியே புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடத்தப்படும் என்று கஜகஸ்தான் அறிவித்துள்ளது. அந்நாட்டின் அரசியல் சாசனத்தில் ஜூன் மாதத்தில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் 2024-ஆம் ஆண்டில் நடக்க வேண்டிய ஜனாதிபதித் தேர்தலை நடப்பாண்டு நவம்பர் 20-ஆம் தேதியே நடத்தப்போவதாக தற்போதைய ஜனாதிபதி காசிம் ஜோமார்ட் டோகாயேவ் அறிவித்துள்ளார். பரந்த அளவிலான பங்கேற்புடன் தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
  10. 300 கைதிகளை ரஷ்யாவும், உக்ரைனும் பரிமாறிக் கொண்டுள்ளன. இதில், 10 பேர் வெளிநாட்டவர்களாவர். உக்ரைன் நெருக்கடி தொடங்கியதில் இருந்து இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் கைதிகள் பரிமாற்றம் இதுவரையில் நடந்ததில்லை. இதில் ரஷ்யப் படைகளிடம் சரணடைந்த 215 உக்ரைன் படைவீரர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். இந்தப் பரிமாற்றத்திற்கு துர்க்கியே மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் எடுத்த முயற்சிகளே காரணம் என்று சொல்லப்படுகிறது.
  11. வெப்பமயமாதல் பிரச்சனையில் சாதகமான பல நடவடிக்கைகளை ஐரோப்பிய நாடுகளும், மற்ற பிற வளர்ந்த நாடுகளும் எடுக்க வேண்டும் என்ற சீனா வலியுறுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் துறையின் சீனப்பிரதிநிதியான சீ சென்குவா, ஜெர்மனியின் பிரதிநிதியான ஜென்னிபர் மோர்கனைச் சந்தித்துப் பேசுகையில் இதைத் தெரிவித்துள்ளார். சில ஐரோப்பிய நாடுகள் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன என்பதையும் ஜெர்மனியிடம் சீனா சுட்டிக்காட்டியுள்ளது.
;