மதுரை, ஜூலை 9- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரை ஓபுளா படித்துறையில் ஜூலை 23 ஆம் தேதியன்று மாநில உரிமை பாதுகாப்பு மாநாடு நடை பெறுகிறது. இந்த மாநாட்டுக்கான வரவேற்புக்குழு அமைப்புக்கூட்டம் மற்றும் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்பில் தீக்கதிர் சந்தா தொகை வழங்கும் சிறப்பு பேரவை ஜூலை 8 சனிக்கிழமையன்று சோலை மஹாலில் நடைபெற்றது. பேரவைக்கு கட்சியின் வடக்கு - 1 ஆம் பகுதிக்குழு செயலாளர் வி. கோட்டைச்சாமி தலைமை வகித்தார். மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ் ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் கள் சு.வெங்கடேசன் எம்.பி., எஸ்.கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாநகர துணை மேயர் டி. நாகராஜன், மாமன்ற உறுப்பினர் டி.குமரவேல் உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.
தீக்கதிர் சந்தா
பகுதிக்குழுக்கள் மூலம் கிளைகள் வாரியாக சேர்க்கப்பட்ட தீக்கதிர் ஆறு மாதச் சந்தா, ஆண்டு சந்தா என்று 666 சந்தாக்களுக்கான தொகை 7 லட்சத்து 43 ஆயிரத்து 675 ரூபாயை மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ண னிடம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜா. நரசிம்மன், மாமன்ற உறுப்பினர் வை. ஜென்னியம்மாள் ஆகியோர் வழங்கினர்.
வரவேற்புக்குழு அமைப்பு
இந்நிகழ்ச்சியில் மாநில உரிமை பாதுகாப்பு மாநாட்டுக்கான வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. வரவேற்புக்குழுத் தலைவராக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன், செயலாளராக மாவட்டச் செய லாளர் மா. கணேசன், பொருளாளராக தெற்கு பகுதிக்குழு செயலாளர் ஜெ. லெனின், துணைத் தலைவராக மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், துணைச் செயலாளராக துணை மேயர் டி. நாகராஜன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், தெற்கு பகுதிக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் அடங்கிய ஒருங்கிணைந்த வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ. ரமேஷ், தீக்கதிர் பொதுமேலாளர் ஜோ. ராஜ்மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.