states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

அமைதியை சீர்குலைக் கும் அல்லது சட்டத்திற்கு எதிரானவர்கள் மீது நட வடிக்கை எடுப்பதை நாங்கள் (காங்கிரஸ்) எதிர்க்கவில்லை. ஆர் எஸ்எஸ் மற்றும் பிற அமை ப்பினரும் இதேபோல் அமைதியை சீர்குலைக் கிறார்கள், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தகைய அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் நீண்ட நாட்களாக எடுக்கப் படாமல் இருக்கும் 120  வாகனங்களை உரிய ஆவணங்களை சமர்ப்பி த்து எடுத்துச் செல்லலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ராஜஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நாடகம் இல்லை; ஊடகங்கள் இந்த விவகாரத்தை ஒரு நாடகமாக பார்க்கலாம்; ஆனால் எல்லாம் ஜனநா யக முறைப்படி செய்து வருகிறோம்; இரண்டு நாட்களில் ராஜஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி எல்லாம் சுமூக மாக முடிவடையும் என  காங்கிரஸ் பொதுச்செய லாளர் கே.சி.வேணு கோபால் கூறியுள்ளார்.

முகவரி இல்லாத சாலை யோர கடைகளுக்கு 2 கிலோ, 5 கிலோ கேஸ்  சிலிண்டர் கூட்டுறவு சங்கம் மூலம் வழங்கப் படும் திட்டம் அடுத்த ஒரு வாரத்தில் தொடங் கப்படும் என தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். 

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் 102 எம்எல்ஏக்களின் கருத்து குறித்து கட்சியின் தலை மையிடம் கூறுவார். கெலாட் ராஜினாமா செய்யவில்லை. அது குறித்த பேச்சுக்கே இட மில்லை என முதல்வர் அசோக் கெலாட் ஆதர வாளர் பி.எஸ்.கச்சாரியா வாஸ் கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்திற்கு உட்பட்ட வசாய் பகுதி யில் உள்ள ஒரு தொழிற் சாலையின் கொதிகலன் வெடித்து எற்பட்ட தீ  விபத்தில் 3 பேர் உயிரி ழந்தனர். 8 பேர் படுகாயத் துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி.

துபாயில் இருந்து மும்பை வந்த விமானத்தில் சுமார் 370 கிராம் தங்கத்தை சுங்கத்துறையினர் பறி முதல் செய்தனர். சாக்லேட் பேப்பர்களில் தங்கத் துகள்களை பூசி,  சட்டைகளுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்டு கொண்ட வரப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.18.8 லட்சம் ஆகும்.

ஹிமாச்சல பிரதேச காங் கிரஸ் கமிட்டியின் முக்கிய உறுப்பினர் ஹர்ஷ் மகா ஜன் பாஜகவில் இணைந் தார்.