states

வெளிநாடு செல்கிறார் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி 2014-இல் முதன்முறையாக ஆட்சிக்கு வந்தார். அப்போது துவங்கி 2020-ஆம் ஆண்டுக்குள் 58 வெளிநாடுகளைச் சுற்றி முடித்தார். இடையே கொரோனா பரவியதால், 2 ஆண்டுகளாக பெரிதாக வெளிநாடுகளுக்குச் செல்ல முடியவில்லை. இந்நிலையில், விரைவிலேயே அவர் மீண்டும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தைத் துவங்குகிறார். இந்தமுறை ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளுக்கு அவர் செல்கிறார். மே முதல் வாரத்தில் அவர் பயணத்தைத் துவங்குகிறார்.