states

பரந்தூர் விமான நிலையம்: மறுபரிசீலனை செய்க!

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூ ரில் புதிய விமான நிலை யம் அமைத்திட 13 கிரா மங்களில் 4700 ஏக்கர் நிலமும் மற்றும் சாலை, பார்க்கிங் அமைத்திட 7 கிராமத்தி லிருந்து 1014 ஏக்கர் நிலம் என 5714 ஏக்கர் நிலம் எடுக்கப் போவதாக அரசு அறி வித்துள்ளது. வீடுகள் 1005, ஏரிகள் 12, குளம் 17, குட்டை 18, பள்ளிக்கூடம் 4, கோவில்கள் 50 மற்றும் விளைநிலங்க ளை அழித்து விமான நிலையம் அமைக் கும் திட்டத்தை எதிர்த்து அப்பகுதி விவசாயி கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் வற்புறுத்தியதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மச்சேந்திர நாதன் ஐ.ஏ.எஸ்  தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்தது. ஆனால்,  அந்த ஆய்வறிக்கையை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படாமல் முடக்கி வைத்திருப்பது சரியல்ல. அதே நேரத்தில், விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் நிலத்தை கையகப் படுத்துவதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டு நடவடிக்கையில் இறங்கியி ருப்பதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டிக்கிறது. இத்தகைய செயலை தமிழ் நாடு அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். 2013 ஆம் ஆண்டு நிலம் கையகப் படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் செயல்பட வேண்டும். சுற்றுச்சூழல் ஆய்வின்படி 26 சதவீதம் நீர் இருப்பதாகவும் மேலும் பட்டியல் இன மக்கள் கிராமங்களில் அரசு புறம்போக்கு நிலங்களில் பல வருடமாக வசித்து வரும் குடியிருப்புகளை இழக்கும் நிலை உள்ளது. விளைநிலம், குடியிருப்புகள், ஏரிகள், குளம், குட்டை, பள்ளிக்கூடம், ஆரம்ப சுகா தார நிலையம், மக்கள் வாழ்வாதாரம் கிராமம் முழுமையாக அழித்து பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதை தமிழக அரசு மறுபரிசீலனை  செய்ய வேண்டும்.