states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

  1. ஓபிஎஸ் அதிமுக தலை மை அலுவலகம் செல்ல  உள்ள நிலையில், பாது காப்பு வழங்க வேண்டும் என ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அவரது ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் மனு கொடுத்துள்ளார்.
  2. அதிமுக பொதுச்செய லாளர் யார் என்பதை  தொண்டர்கள் முடிவு செய்ய வேண்டிய விஷய மாகும்.  யார் வந்தாலும் நான் சந்திப்பேன் என சசிகலா பேசியுள்ளார்.
  3. கடுமையான பணவீக்கத்தை ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நெதர்லாந்து சந்தித்து வருகிறது. குறிப்பாக, எரிபொருட்களின் விலைகள்தான் இந்த விலைவாசி உயர்வுக்குக் காரணமாக இருக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தோடு ஒப்பிடுகையில் நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் எரிபொருட்களின் விலை 151 விழுக்காடு அதிகமாக இருக்கிறது. ஜூலை மாதத்தில் இது 151 விழுக்காடாக இருந்தது. ஒட்டுமொத்த பணவீக்கம் 12 விழுக்காடாக அதிகரித்திருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தின் வருங்காலம் பற்றிய கவலை ஏற்படுவதாக நெதர்லாந்து பொருளாதார நிபுணர்களில் ஒருவரான ஒலாப்வன் விலியட் கூறியுள்ளார்.
  4. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புருண்டியில் புதிய பிரதமராக என்டிராகோபுகா நியமிக்கப்பட்டுள்ளார். காவல்துறையின் முன்னாள் அதிகாரியான இவர், உள்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சராகப் பணியாற்றி வந்தார். தற்போதைய ஜனாதிபதி எவரிஸ்டே எண்டாயிஷிமியேயின் வேண்டுகோளை ஏற்று புருண்டி நாடாளுமன்றத்தில் இந்த நியமனத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. எனினும் 2015 ஆம் ஆண்டில் பல்வேறு மனித உரிமை மீறல்களுக்கு இவர் காரணம் என்ற குற்றச்சாட்டு இவர் மீது இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
  5. புதிய பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு பங்கேற்ற நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்திலேயே லிஸ் டிரஸ் கடுமையான கேள்விகளை எதிர்கொள்ள  வேண்டியிருந்தது. பல்வேறு கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் அளிக்காத டிரஸ், “இப்போதைக்கு நமக்கும் தேவை பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் அரசாகும். இப்படியொரு அரசு இருக்க வேண்டுமென்றுதான் பிரிட்டன் மக்களும் விரும்புகிறார்கள். வடக்குக் கடற்பகுதியில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவைக் கூடுதலாக எடுப்பதில் கவனம் செலுத்தப் போகிறோம் “ என்றார்.
;