states

மேலாடையின்றி ஆர்ப்பாட்டம் மின்வாரிய ஓய்வூதியர்கள் அறிவிப்பு

சென்னை, செப். 23 - பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நவ.22 அன்று மேலாடையின்றி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக மின்வாரிய ஓய்வூதியர்கள் அறிவித்துள்ளனர். தமிழ் நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின்  பொதுக்குழு கூட்டம் செப்.19, 20 தேதிகளில் நாமக்கல்லில் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில், பொதுச் செயலாளர் எஸ்.ஜெகதீசன், பொருளாளர் எஸ்.பழனி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செய லாளர் எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். ஓய்வு பெற்றோரின் உரிமைகளையும், வாரியத்தின் சுய  செயல்பாட்டையும் முடமாக்கும் வகையில் பிறப்பித்த உத்தரவை மின்வாரியம் ரத்து செய்ய வேண்டும், 3 விழுக்காடு  அகவிலைப் படியை அரசின் மறுஉத்தரவுக்கு காத்திராமல் உடனே வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தை நவ.1 முதல் வாரியமே ஏற்று நடத்த வேண்டும், வாரியத்தின் 60ஆண்டு நிறைவையொட்டி நிரந்தர ஊழி யருக்கும், ஒரு பகுதி ஓய்வூதியருக்கும் 3 விழுக்காடு ஆண்டு உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதை பாரபட்சம் இன்றி  அனைத்து ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவ.22 அன்று மாவட்ட  தலைநகரங்களில் மேலாடையின்றி ஆர்ப்பாட்டம்  நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

;