states

img

கேரள முதல்வர், குடும்பத்தினர் முன்னிலையில் மேயர் ஆர்யா - எம்எல்ஏ சச்சின் திருமணம்

திருவனந்தபுரம், செப். 5- திருவனந்தபுரம் மேயர் ஆர்யா  ராஜேந்திரனும், சட்டமன்ற உறுப்பி னர் கே.எம்.சச்சின்தேவும் வாழ்க்கைப் பாதையில் இணைந்தனர். திருமணம்  எளிமையாகவும் அன்பின் வெளிப்பாடாக வும் நடந்தது. திருவனந்தபுரம் ஏகேஜி அரங்கில் இரு குடும்பத்தினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன், முதல்வர் பினராயி விஜ யன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவனந்தபுரம் மாவட்டச் செயலாளர் அனவூர் நாகப்பன், கோழிக்கோடு மாவட்டச் செயலாளர் பி.மோகனன் ஆகி யோர் முன்னிலையில் நடைபெற்றது. ஆர்யா ராஜேந்திரன் நாட்டின் இளம் மேயர் ஆவார். பாலுசேரி தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் சச்சின் தேவ் சட்ட மன்றத்தின் இளைய உறுப்பினர் ஆவார்.  திருமணத்தை எளிமையாக நடத்திய தம்பதி, விருப்பமுள்ளவர்கள் முதல மைச்சரின் நிவாரண நிதிக்கோ அல்லது மாநகராட்சி ஆதரவற்றோர் - முதியோர் இல்லங்களுக்கோ பரிசாக வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். திருமண விருந்தாக மரவள்ளிக்கிழங்கு, கேசரி, பால்பாயாசம் பரிமாறப்பட்டது.

;