states

போதைப் பழக்கத்தை ஊக்குவிப்பதாகவே அமையும்: மாதர் சங்கம் விமர்சனம்

சென்னை,ஜூலை 13- காலையில் மது விற் பனை குறித்து ஆலோசித்து வருவதாக மதுவிலக்கு -ஆயத்தீர்வை துறை அமைச்சர் கூறியிருப்பது போதைப்பழக்க த்தை ஊக்குவிப்பதாகவே  அமை யும் என்று அனைத்திந்திய ஜனநாயக  மாதர் சங்கம் விமர்சனம் செய்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச்செயலாளர் அ.ராதிகா ஆகியோர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: தமிழகத்தில்  டாஸ்மாக் குறித்த ஆய்வுக் கூட்டத் திற்குப் பிறகு செய்தியாளர் களை சந்தித்த மதுவிலக்கு-ஆயத்தீர்வை துறை அமைச் சர்  முத்துசாமி  காலை 7 மணி யிலிருந்து டாஸ்மாக் கடை களை திறக்க ஆலோசித்து வருவதாகவும், 90மிலி,  180மிலி அளவில் பாக்கெட்டு களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பது குறித்து ஆலோ சித்து வருவதாகவும் கூறி யிருக்கிறார்.

 காலையில் மதுக்கடை திறப்பது, போதையை ஊக்குவிக்கும் நடவடிக்கை களில் ஒன்றாகவே அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் பார்க்கிறது. 500 சதுர மீட்டர் அடி பரப்பளவில் கடைகள் திறக்கப்படும் என்பது வீதிக்கு வீதி டாஸ்மாக் கடைகளை திறந்து வைப்பதற்காக அரசு எடுக்கும் இன்னொரு முயற்சியோ என சந்தேகம் எழுகிறது. திராவிட முன் னேற்றக் கழக  தேர்தல்  அறிக்கையில் சொன்னபடி படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த முன்வர வேண்டுமே தவிர இத்த கைய மதுவை ஊக்குவிக் கும் நடவடிக்கைகளில் ஈடு படக்கூடாது.    தமிழகத்தில் ஏற்கனவே போதை கலாச்சாரம் என்பது பள்ளி, கல்லூரிகளில் இரு ந்து தொடங்கி அனைத்து இடங்களிலும் பெருகி வரு வதை காண முடிகிறது. பெண்கள், குழந்தைகள் மீது  இழைக்கப்படும் பாலியல் வன்முறைகளுக்கு மிக முக் கிய காரணியாக இருப்பது போதை என்பது பல்வேறு ஆய்வுகளில்  தெரியவரு கிறது. இச்சூழலில் தமிழக அரசு மேலும் டாஸ்மாக் கடை களை குறைப்பதற்கான நட வடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.