மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு காரணமான குற்றவாளியின் பிணையை ரத்து செய்க!
கனியாமூரில் உள்ள சக்தி இண்டர்நேஷனல் பள்ளி மாணவி ஸ்ரீமதி 2022 ஜூலை 13 அன்று பள்ளியில் மூன்றாவது மாடி யிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வா கம் தெரிவித்துள்ளது. இதனை கண்டித்து மாதர் சங்கம் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்திற்கு பின்னர் பள்ளியின் தாளாளர் மற்றும் அவரது மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள். அதன் பின்னர் சில நாட்க ளில் பிணையில் வெளியே வந்துள்ளனர். குற்றவாளிகள் சில நாட்க ளிலேயே பிணையில் வெளியில் வந்தது முக்கியமான தடயங்களை இவர்கள் அழிக்கக்கூடும். மேலும் ஸ்ரீமதியின் இறப்பு தற்கொலை பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை உரிய விசாரணையில்லா மல் வழக்கை தற்கொலை என்று பதிவு செய்துள்ளது கண்டனத் துக்குரியது. காவல்துறையினர் ஸ்ரீமதியின் வழக்கை போக்சோ சட்டப் பிரிவின்கீழ் பதிவு செய்ய வேண்டும். பிணையில் வெளியில் வந்த குற்ற வாளிகளின் பிணையை ரத்து செய்ய வேண்டும். இந்த இறப்பின்கீழ் பல்வேறு மர்மங்கள் இருப்பதால், தமிழக அரசு உடனடியாக இவ்வழக்கை விரைந்து நடத்தி குற்றவாளிகளுக்கு விரைந்து தண்ட னையை பெற்றுத் தர வேண்டும். வழக்கை உரிய முறையில் பதிவு செய்யாத காவல்துறையினர் மீது துறைவாரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்கிட வேண்டும். ஸ்ரீமதியின் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். குற்றவாளிகளுக்கு பிணை வழங்கும் போது தீர்ப்பு சொல்லும் வகையில் பேசியது கண்டனத்துக்குரியது. தமிழக அரசு உடனடியாக தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கடலூரில் நடைபெற்ற மாநில மாநாட்டு தீர்மானத்தில் வலியுறுத்தப் பட்டுள்ளது.
மாதர் சங்க மாநில மாநாடு வலியுறுத்தல்
கடலூர், அக்.1- அரசு வழங்கும் பட்டாக்களை குடும்ப தலைவி பெயரில் வழங்கு மாறு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 16 ஆவது மாநில மாநாடு வலியுறுத்தியுள்ளது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள் வருமாறு: உயர் கல்வி நிறுவனங்களில் நிலவும் சாதிய, பாலின பாகுபாடு கள், இட ஒதுக்கீடு மீறல் உள்ளிட்ட அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். எல்லா மத்திய பல்கலைக் கழகங்கள், தனி யார் பல்கலைக் கழகங்கள், ஒன் றிய அரசின் உயர் கல்வி நிறுவனங் களில் பாலின துன்புறுத்தல் களுக்கு எதிரான உள் விசாரணைக் குழு இருப்பதை, செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். குழு அமைக்கப்படாத உயர் கல்வி நிர் வாகங்கள் மீது நடவடிக்கை எடுக் கப்பட வேண்டும். இட ஒதுக்கீடு மீறல்களுக்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஒன்றிய அரசின் சமூக நீதி அமைச்சகம் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி நிலுவைக் காலியிடங்கள் முழுமையாக நிரப் பப்படுவதை உறுதி செய்ய வேண் டும்.
பெண் சிசுக்கொலை
பெண் குழந்தைகள் அதிகமாக இருக்கிற குடும்பங்களில் இல வச கல்வி, வறுமையில் இருந்து மீளுவதற்கான வேலை வாய்ப்பை உத்தரவாதப்படுத்துவது, அரசின் நலத்திட்டங்கள் கிடைக்கும் வகையிலான நிபந்தனையற்ற உத் தரவுகள் தேவைப்படுகிறது, சமூக, கலாச்சார, பொருளாதார, மதம் சார்ந்த அடிப்படையில் பாகுபாடு பார்க்காமல் பெண் குழந்தை களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி பெண் சிசுக்கொலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இலவச வீட்டுமனை பட்டா
புறம்போக்கு பகுதிகளில் பல ஆண்டுகளாக குடியிருக்கும் மக்க ளுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்குவதற்கு உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும். பெரு முதலாளிகள் அரசியல்வாதிகள் ஆக்கிரமித்துள்ள புறம்போக்கு நிலங்களை அரசு கையகப்படுத்த வேண்டும், வேறு வழியே இல்லா தவர்களுக்கு மாற்று இடம் வழங்கி மக்களுக்கு சுகாதாரம், அடிப்படை போக்குவரத்து வசதிகளை மாநில அரசாங்கம் செய்து தர வேண்டும். பட்டாக்களை குடும்ப தலைவி பெயரில் வழங்க வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகள்
உள்ளாட்சி மன்ற பெண்பிரதி நிதிகள் சுயமாக செயல்படுவதற்கு சென்னை மாநகராட்சியில் சட்டம் இயற்றியதைப்போல அனைத்து இடங்களிலும் சட்டம் இயற்றிட வேண்டும். ஒன்றிய அரசு அது சார்ந்த அலுவலகங்களில் 10 லட்ச மும், மாநில அரசு அது சார்ந்த அலு வலகங்களில் 4 லட்சம் காலிப் பணி யிடங்கள் உள்ளன. எனவே காலிப் பணியிடங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கி நிரப்பிட வேண்டும், மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை நாட்களை அதிகரிக்க வேண்டும், தேசிய நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை நிறைவேற்றவேண்டும்.
ஆபாச விளம்பரங்களை தடுத்துநிறுத்துக!
தொலைக்காட்சிகளில் ஆபாச விளம்பரங்கள் ஒளிபரப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும். அரசு அலுவலகங்களில் விசாகா கமிட்டியில் யார் இருக்கிறார்கள் என்பதை வெளிப்படையாக எழுதி வைக்க வேண்டும் உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.