states

img

பாஜகவை வீழ்த்துவதில் ‘இந்தியா’ கூட்டணி உறுதியோடும் வலிமையோடும் உள்ளது

பாஜக அரசை வீழ்த்து வதற்கு  நாடு தழுவிய அளவில் உருவாகி யுள்ள இந்தியா கூட்டணியிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விலகியி ருப்பதாகவும் அந்த கூட்டணியில் நீடிக்க வில்லை என்பது போன்ற செய்திகள் ஊடகங்களில் வெளிவந்து கொண்டி ருக்கின்றன. இது முழுக்க முழுக்க உண்மைக்குப் புறம்பானது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை யில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, பாஜவை வீழ்த்துவதற்கு மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும் என்று தொடர்ந்து வலி யுறுத்தி வருகிறோம்; தொடர்ந்து அதற்காக பணியாற்றியிருக்கிறோம். 2014,2019 இல் நடைபெற்ற தேர்தல்களில் அதற்காக முயற்சியெடுத்த போது, அந்த முயற்சி வெற்றிபெறவில்லை.இன்றை க்கு 2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குகிற சூழ்நிலையில் அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து ‘இந்தியா’ என்ற கூட்டணியை உருவாக்கியிருப்பது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகத்தான் பார்க்கி றோம். இந்த கூட்டணி நீடிக்க வேண் டும். கருத்தொற்றுமையுடன் செயல் பட்டு, 2024 தேர்தலில் பாஜக அரசை வீழ்த்த வேண்டும் என்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாகவுள்ளது. 

அதிர்ந்து போயுள்ள  ஆர்எஸ்எஸ்-பாஜக

சமீபத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூட்டத்தில், ‘இந்தியா’ கூட்டணியில் மேலும் பல கட்சிகளை இணைத்து பலப்படுத்தப்பட வேண்டும்; புதிய சக்தி களை இணைத்து விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று தெளிவாக கூறப் பட்டுள்ளது.  ஆனால் இந்தியா கூட்டணி உருவாகி யதில் இருந்தே ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைமை அதிர்ந்துபோயுள்ளது.அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் அவர்கள் மீளவில்லை. இதனால் இந்தியா கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற் படுத்த வேண்டும் என்பதற்காக, சிபிஎம் இந்தியா கூட்டணியில் இல்லை என்ற தவறான பிரச்சாரத்தை பாஜகவும் அதன்  ஆதரவு ஊடகங்களும் கிளப்பிவிட்டுள் ளன. இத்தகைய செய்திகள் கொஞ்சம் கூட உண்மையில்லை.  அகில இந்திய அளவில் 28 கட்சிகள் ஒன்றுசேர்ந்திருக்கின்றன. இன்னும் 10 கட்சிகள்,புதிய அமைப்புகள் கூட இந்தியா கூட்டணியில் சேரலாம். தேவைக்கேற்ப இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சித் தலைவர்கள் கலந்தா லோசித்து உரிய முடிவுகளை எடுக்க முடியும். தமிழ்நாட்டில் உள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கடந்த 6 ஆண்டு களுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.  இந்த கூட்டணி,நடைபெற்ற நாடாளு மன்ற பொதுத்தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சி தேர்தல் ஆகிய வற்றில் மகத்தான வெற்றியைப் பெற் றோம். திமுக தலைவரும் முதலமைச்ச ருமான மு.க.ஸ்டாலின் கூட்டுகிற கூட்டத்தில் கூட்டணிக்கட்சித் தலைவர் கள் கலந்துகொண்டு, பேசி முடிவுகளை எடுத்து வருகிறோம்.தமிழ்நாட்டில் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஒற்று மையோடும் வலிமையோடும் உள்ளது.  இந்தியா கூட்டணியில் ஒருங்கி ணைப்புக்குழு இருப்பதை நாங்கள் ஆட்சேபிக்கவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி இந்தியா கூட்டணியில்தான் உள்ளது.இக்கூட்டணியை பலப்படுத்த வேண்டும், விரிவுபடுத்த வேண்டும் என்று தெளிவாக கூறியுள்ளோம். 

5 நகரங்களில் மாபெரும் பொதுக்கூட்டம்

ஒரு முக்கியமான தீர்மானத்தை இந்தியா கூட்டணி நிறைவேற்றியுள்ளது. அது என்னவென்றால், இக்கூட்டணி கட்சித்தலைவர்களின் கூட்டணியாக மட்டும் இல்லாமல்,மக்களின் வாழ்வாதா ரப் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கக் கூடிய கூட்டணியாக இருக்க வேண்டும்  என்ற அடிப்படையில் ஆலோசனை யை முன்வைத்தோம்.தில்லி,மும்பை, நாக்பூர், கொல்கத்தா,சென்னை ஆகிய நகரங்களில் இந்தியா கூட்டணியின் தலை வர்கள் கலந்து கொள்கிற மிகப்பெரிய பொதுக்கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும் இது இந்தியா முழுவதும் எதிரொ லிக்கும்.விலைவாசி உயர்வு, வேலை யில்லாத் திண்டாட்டம்,ஒன்றிய அரசின் கார்ப்பரேட்மய ஆதரவுக்கொள்கை, மதவெறி ஆகியவற்றைக் கண்டித்தும் மதச்சார்பின்மையை வலியுறுத்தியும் இந்த பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டும் என்று ஆலோசனையை சிபிஎம் முன்வைத்துள்ளது. கட்சியின் பொ துச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி இந்த ஆலோசனையை இந்தியா கூட்டணி கூட்டத்தில் முன்வைத்துப் பேசியுள்ளார். பொதுக்கூட்டங்களை நடத்தலாம் என்று கூட்டணி தலைவர்களும் ஒத்துக் கொண்டுள்ளனர்.  இப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது, கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற  முயற்சிதான் இப்போது பரப்பப்படும் உண்மைக்குப் புறம்பான செய்திகள்.

குழப்பத்தை  ஏற்படுத்த முடியாது

நாடாளுமன்றத் தேர்தலாகட்டும், சட்டமன்றத் தேர்தலாகட்டும் அந்தந்த மாநிலங்களில் உள்ள நிலைமைக்கு ஏற்றபடிதான் தொகுதி உடன்பாடு பற்றி பேச முடியும்.  அந்தந்த மாநிலங்களில் உள்ள சூழலுக்கு ஏற்பத்தான் தொகுதிப்பங்கீடு செய்துகொள்ள முடியும்.கேரளத்தில் சிபிஎம் தலைமையிலான எல்டிஎப் அணி யும் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் அணியும் தான் உள்ளன. அங்கு பாஜகவுக்கு நோட்டா அளவுக்குக்கூட வாக்குகள் கிடைக்காது. எனவே கேரளத்தில் எல்டிஎப், யுடிஎப் தனித்தனி யாகத்தான் போட்டியிடும்.கடந்த தேர்தல்களில் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் சில கட்சிகளுடன்  இணைந்துதான் போட்டி யிட்டோம். இதுகுறித்து கேள்வி எதுவும் எழவில்லை. தமிழ்நாட்டின் அரசியல் சூழலுக்கு ஏற்ப சிபிஎம் தேர்தலை சந்திப்பது குறித்து தமிழக மக்களுக்கு நன்றாகத்தெரியும். கேரளச்சூழலுக்கு ஏற்ப அங்கு தேர்தலை சந்திக்கிறோம். வடமாநிலங்கள் மற்றும் சில மாநிலங்க ளில் இப்படியான சூழல் வரும்.  பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் உள்ள 90 சதவீதமான கட்சிகள் வெறும் பெயருக்கான கட்சிகள் தான். மக்கள் செல்வாக்குள்ள கட்சிகள் கிடையாது. ஆனால் இந்தியா கூட்டணி யில்  உள்ள கட்சிகள் மாநிலங்களில் வலு வாக இருக்கக்கூடிய கட்சிகள்.ஆட்சிக்கு வரக்கூடிய கட்சிகள். அந்த மாநி லங்களில் பாஜகவை வீழ்த்துவதுதான் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிக ளின் நோக்கம். இந்தியா கூட்டணிக்குள் பாஜகவால் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது. அதன் முயற்சி பகல்கன வாகத்தான் முடியும். இந்தியா கூட்டணி குறித்து பேசுகிற ஊடகங்கள், என்டிஏ கூட்டணி குறித்து ஏன் பேசவில்லை.தமிழகத்தில் என்டிஏ கூட்டணி இருக்கிறதா என்பதே தெரிய வில்லை.அதிமுகவின் ஜெயக்குமார் கூட்டணி இல்லை என்றார்.பாஜக அண்ணாமலை வேறுவிதமாகப் பேசு கிறார். இப்போது இரண்டு தலைமையும் அடக்கி வாசியுங்கள் என்று கூறுகிறது.கடும் குழப்பத்தில் என்டிஏ கூட்டணி உள்ளது.

குழாயடிச் சண்டையாக அதிமுக-பாஜக மோதல் 

தமிழகத்தில் மோடி படத்தை போடா மல்தான் அதிமுகவினர் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.பாஜக வின் கொடிகளை கட்டவில்லை, பாஜக தலைவர்களைக்கூட பிரச்சாரத்தி ற்கு அழைக்கவில்லை அதிமுகவி னர். இதென்ன கூட்டணி? தொலைக் காட்சிகளில் குழாயடிச்சண்டை போல அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் மோதல் நடக்கிறது. அண்ணாமலை குறித்து அதிமுகவினர் பேசிய பேச்சும் அதிமுக வினர் குறித்து அண்ணாமலை பேசுகிற பேச்சும் காதுகொடுத்து கேட்க முடியாத அளவில் உள்ளது.இந்த என்டிஏ கூட்ட ணியை தமிழகத்தில் மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? இனிமேல் பாஜகவுடன் தேர்தல் கூட்டணி வைக்கமாட்டேன் என்று ஜெயலலிதா கூறினார்களே, இதையும் மீறி எடப்பாடி பழனிசாமி ஏன் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார் என்று அதிமுக தொண் டர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.பாஜக தனியாக போட்டியிட்டால் நோட்டா அளவுக்குக்கூட ஓட்டுகள் வாங்காது என்று அதிமுக நிர்வாகி ஜெயக்குமார் கூறினார். நோட்டா அளவுக்குக்கூட ஓட்டு கள் வாங்காத பாஜகவுடன் அதிமுக ஏன் கூட்டணி வைக்கிறது? 99 சதவீதம் அதிமுக தொண்டர்கள் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்ற மனநிலை யில்தான் உள்ளனர். இதையும் மீறி அதிமுக தலைவர்கள் தங்களை பாது காத்துக் கொள்வதற்குத்தான் பாஜகவு டன் கூட்டணி வைத்துள்ளனர். தமிழக மக்கள் அதிமுக-பாஜக கூட்டணியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 

தொகுப்பு: எஸ்.உத்தண்ட ராஜ்