states

img

பிரான்ஸில் கனமழை வெள்ளம் 6 நகரங்களுக்கு ரெட் அலர்ட்

பிரான்ஸ் நாட்டில் கனமழையால் வெள்ளம் ஏற் பட்டுள்ளது. அந்நாட்டின் தெற்கு பகுதியில் மழை வெள்ள பாதிப்பு அதிக மாக உள்ளது. இதனால் அங்குள்ள 6 நகரங்க ளுக்கு ரெட் அலர்ட் விடுக் கப்பட்டுள்ளது. மேலும் 18 பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள் ளது.தெற்கு ஐரோப்பாவில் ஒரு வாரத்திற்கு முன் ஏற்பட்ட கிர்க் சூறாவளியின் காரணமாக தற்போது பிரான்ஸ் இத்தகைய பாதிப்பை சந்தித்து வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. வெறும் 48 மணி நேரத்தில் சுமார் 630 மில்லி மீட்டர் மழை பதிவானதாக பிரான்ஸ் வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.