states

இரு சக்கர வாகன விற்பனையகத்தில் தீ

பலமு  (ஜார்க்கண்ட்), செப்.10- ஜார்க்கண்டில் உள்ள இருசக்கர விற்பனை மையம் தீப்பற்றி எரிந்ததில், மூதாட்டி ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்; 300 இரு  சக்கர வாகனங்கள் எரிந்து சாம்பலாகின. ஜார்க்கண்டின் பலமு மாவட்டம் டால்டோங்கஞ்ச் நகரில் உள்ள இருசக்கர வாகன விற்பனை மையத்தில் வெள்ளிக்கிழமை இரவு திடீ ரென தீப்பற்றியது. இதில், கோடவுனில் நிறுத்தப்பட்டிருந்த பல கோடி  ரூபாய் மதிப்புள்ள 300 பைக்குகள் எரிந்து கருகின. இது பற்றி தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை  அணைத்தனர். இதில், விற்பனை மைய உரிமையாளர் சதீஷ் குமார்  சாஹுவின் தாய் புகையால் மூச்சுத் திணறி உயிரிழந்தது தெரியவந்தது.