ஸ்ரீபெரும்புதூர், ஆக. 6- ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக் குட்பட்ட எச்சூர் ஊராட்சி மன்ற தலைவர் குமுதா டோம்னிக். இவரது கணவர் டோமினிக் திமுகவில் மாவட்ட பொறுப்பில் உள்ளார். அவரது மகன் ஆல்பர்ட் (30). இவர் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய திமுக இளை ஞரணி பொறுப்பில் உள்ளார். ஆல்பர்ட் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற் சாலைகளில் கட்டுமான பணி மற்றும் ஸ்கிராப் எனப்படும் தொழிற் சாலை கழிவு பொருட்கள் எடுப்பது போன்ற தொழில் செய்து வருகிறார். ஸ்கிராப் எடுக்கும் தொழிலில் நிறைய பணம் கிடைத்தால் அதில் கடும் போட்டி நிலவி வந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்க ளுக்கு முன் ஆல்பர்ட் தொழிற்சாலை மேலாளரை மிரட்டிய வழக்கில் முன் ஜாமீன் பெற்ற நிலையில் காவல் நிலையத்தில் கையெழுத்து போடா மல் தலைமறைவாக இருந்து வந்தார். சுங்குவார்சத்திரம் அருகே சிப்காட் பகுதியிலுள்ள தனியார் நிறுவனம் அருகே சாலை ஓரத்தில் நின்று ஆல்பர்ட் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு 3 இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ஆல்பர்ட் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி உள்ளனர். இதில் சுதாரித்து கொண்ட ஆல்பர்ட் தப்பி ஓட முயன்றபோது அவரை விரட்டி சென்று அரிவாளால் வெட்டினர். இதில் ரத்த வெள்ளத் தில் ஆல்பர்ட் கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு திருபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக் காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்து வர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த சுங்குவார் சத்திரம் காவல் துறையினர் ஆல்பர்ட் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.