states

தீக்கதிர் விரைவு செய்திகள்

கடத்தல்  அரிசி பறிமுதல் 

சென்னை, செப்.19- தமிழகத்தில் செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரையிலான ஒரு வார த்தில் கடத்த முயன்ற ரூ.27 லட்சம் மதிப்புள்ள 4,813 குவிண் டால் பொது விநியோகத் திட்ட அரிசியும், இக்கடத்த லுக்கு பயன்படுத்தப்பட்ட 54 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

லடாக்கில் 2-வது நாளாக நிலநடுக்கம்!

லடாக்கின் லே-வில் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.36 மணியளவில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. அதேபோல், திங்களன்று காலை 9.30 மணியளவில் கார்க்கில்  பகுதியில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை அடுத்து  மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். லடாக் பகுதிகளில் அடுத்த டுத்து நிகழ்ந்த நிலநடுக்கங்கள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன.

ராகிங்கைத் தடுக்க கல்லூரிகளில் சிசிடிவி!

ராகிங்கை தடுக்க அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சிசிடிவி கேமிராக்களை கட்டாயமாக பொருத்த வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்  ளது. மேலும், “விடுதிகள், உணவகங்கள், கழிவறைகளில் ராகிங்கிற்கு எதிரான விழிப்புணர்வு சுவ ரொட்டிகளை ஒட்டுவதுடன், முக்கிய இடங்களில் எச்சரிக்கை மணியைப் பொருத்த வேண்டும்; ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என ஒவ்வொரு மாணவரும் www.antiragging.in இணையதளத்தில் பதிவு செய்திருப்பதை உறுதிசெய்ய வேண்டும்” என்றும் யுஜிசி தெரிவித்துள்ளது.

ராகுலுக்கு ஆதரவு: 4 மாநிலங்களில் தீர்மானம்!

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி வரவேண்டும் என விருப்பம் தெரிவித்து, அக்கட்சி யின் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றியதைத் தொடர்ந்து,  கட்சியின் சத்தீஸ்கர் மற்றும் குஜராத், தமிழ்நாடு  மாநில காங்கிரஸ் கமிட்டிகளும் ஞாயிற்றுக்கிழமை தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப்டம்பர் 22-ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சண்டிகர் விவகாரம்: புலனாய்வுக் குழு அமைப்பு!

பஞ்சாப் மாநிலம் மொகாலி நகரில் சண்டிகர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு  படிக்கும் மாணவிகள், தங்களை ஆபாசமாக வீடியோ எடுத்ததாக கூறி, போராட்டத்தில் ஈடுபட்ட னர். மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் வீடியோ எடுத்த மாணவி உள்பட 3 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில், சண்டிகர் பல்கலைக்கழக மாணவியர் தொடர்பான வழக்கை விசாரிக்க 3 பேர் கொண்ட மகளிர் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு உள்ள தாக பஞ்சாப் காவல்துறை தலைமை இயக்குநர் கவுரவ் யாதவ் தெரிவித்துள்ளார்.

பழைய ஓய்வூதியத் திட்டம்: பஞ்சாப் பரிசீலனை

“பழைய ஓய்வூதிய முறைக்கு மாற்றுவது குறித்து எனது அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. அதை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் வழிமுறைகளை ஆய்வு செய்ய  தலைமைச் செயலாளரிடம் கேட்டுள்ளேன். எங்கள் ஊழியர்களின் நலனில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

சஞ்சய் ராவத்திற்கு அக்.3 வரை காவல் நீட்டிப்பு!

பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்த சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்தை, அமலாக்க த்துறை, பத்ராசால் நில மோசடி வழக்கில்  கைது செய்து, சிறையில் அடைத்தது. அவ ரது நீதிமன்றக் காவல் செப்டம்பர் 19-ஆம் தேதியோடு முடிவடைவதால், போலீசார் அவரை மும்பை  சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் திங்களன்று ஆஜர்படுத்தி னர். அப்போது, சஞ்சய் ராவத்தின் காவலை அக்டோபர் 3 வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இதனிடையே ராவத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை செப்டம்பர் 21-ஆம் தேதி நடைபெறுகிறது.

டி.கே.சிவகுமார் அமலாக்கத்துறை முன்பு ஆஜர்!

சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில்,  கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் திங்களன்று தில்லியிலுள்ள அமலாக்கத்துறை இயக்குநரகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். 60 வயதாகும் டி.கே. சிவகுமார் பகல் 12 மணியள வில் ஏபிஜே அப்துல் கலாம் சாலையில் உள்ள பெடரல் ஏஜென்சியின் அலுவலகத்தில் நுழைவுச்  சீட்டைப் பெற்றுக்கொண்டு, அமலாக்கத்துறை இயக்குநரகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

பாஜக எதிர்ப்புக் கூட்டணியில் ஆம் ஆத்மி?

ஆம் ஆத்மி கட்சியின் முதல் தேசிய மாநாடு புதுதில்லியில் திங்களன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “பாஜக வுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இணைவது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை” என்று கூறியுள்ளார். “அதே வேளையில், 130 கோடி இந்திய மக்களும், ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் நாம்தான் ‘நம்பர் ஒன்’ என்ற இடத்துக்கு வரு வோம். அதனை யாராலும் தடுக்க முடியாது” என்றும் தமது தொண்டர்கள் மத்தியில் பேசி யுள்ளார்.

தாண்டவமாடும் ஊழல்; பிரதமர் மோடி எங்கே?

“நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. வேலையில்லா திண்  டாட்டம் இருக்கிறது. பட்டதாரிகள் வேலை இல்லாமல் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள். நாட்டில் பாஜக அரசால் எந்தத் தரப்பு மக்களும் நிம்மதியாக வாழ முடியவில்லை. சாதி, மதம் இடையேயான இணைப்பை உடைக்கும் வேலையை பாஜக அரசு செய்து கொண்டிருக்கிறது. ‘ஊழல் செய்ய விடமாட்டேன், அவை நடக்காதபடி காவல் நிற்பேன்’ என்று பிரதமர் மோடி தெரி வித்தார். கர்நாடகத்தில் ஊழல் தாண்டவம் ஆடுகிறது. தற்போது பிரதமர் மோடி என்ன செய்து கொண்டிருக்கிறார்?என்னுடைய 40 ஆண்டுகால அரசியலில் இதுபோன்ற ஊழல் அரசை பார்க்கவில்லை” என்று கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா விமர்சித்துள்ளார்.

மார்க்கெட்டிங் உத்தி தெரிந்த வியாபாரி கிஷோர்!

‘‘பிரசாந்த் கிஷோர் அரசியல் தொண்டர் இல்லை. அவர் மார்க்கெட்டிங் உத்தி தெரிந்த ஒரு வியா பாரி.  பிரசாந்த் கொஞ்ச நாட்களாகவே பாஜக-வுக்கு ஆதரவாக வேலை பார்த்து வருகிறார்.  சில சதித் திட்டங்களின் மூலம் பீகாரில் ஆட்சிக்கு வர பாஜக முயல்கிறது. அதற்கு பிரசாந்தை பயன்படுத்த முயல்கின்றனர். நாங்கள் விழிப்புடன் இருக்கிறோம். அவர்களின் சதித்திட்டம் நிறைவேறாது’’ என்று ஐக்கிய ஜனதா தளம் தலைவர் தலைவர் லல்லன் சிங் கூறியுள்ளார்.

மூன்று நாட்கள் மழைக்கு வாய்ப்பு

சென்னை,செப்.19- தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங் களில் மூன்று நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:- மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி, காரை க்கால் பகுதிகளில் செவ்வாயன்று (செப்.20) ஓரிரு இடங்களில் இடி மின்ன லுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல மேற்கு தொடர்ச்சி மலை  மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதி களிலும் செப்.21 மற்றும் 22ஆம் தேதி களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மன்னார் வளைகுடா மற்றும் இலங்கை கடற்கரையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறா வளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். வடக்கு ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஆகவே மேற் குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் கட லுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குட்டையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி

வேலூர், செப்.19- வேலூர் அருகே உள்ள அப்துல்லாபுரம் ரிக்ஷா கால னியை சேர்ந்தவர் ஜீவா. இவரது மகன்கள்ஆகாஷ் (12), ஹரிஷ்(11).இவர்கள் இருவரும் அப்துல்லாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி யில் 7 மற்றும் 6ஆம் வகுப்பு படித்து வந்தனர். அதே பகுதியை சேர்ந்தவர் வடி வேல் மகன் இமானுவேல் (13). காட்பாடி யில் உள்ள தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார். சிறுவர்களின் தந்தைகள் இருவரும் வேலூரில் மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளர்கள். இந்த நிலையில் சிறு வர்கள் 3 பேரும் அங்குள்ள சாய்பாபா கோவில் பின்புறம் அமைந்துள்ள குட்டைக்கு குளிக்க சென்ற னர். வீடு திரும்பவில்லை. இதனையடுத்து, பெற்றோர் தேடியபோது கரையில் சைக்கிள் மற்றும் உடை கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பிறகு, அக்கம் பக்கத் தில் இருந்தவர்கள் உதவி யுடன் குட்டையில் தேடிய போது உடல்களை கண்டெடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.  அங்கு பரிசோதித்த மருத்துவர்கள்  3 பேரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

மீண்டும் அஸ்தானா

அஸ்தானா, செப்.19- கஜகஸ்தானின் ஜனாதிபதி காசிம்  ஜோமார்ட் டோகாயேவ் பல்வேறு  புதிய சட்டங்களில் கையெழுத்திட்டி ருக்கிறார்.  முன்னாள் ஜனாதிபதியின் பெயரை நினைவுபடுத்தும் வகையில் நாட்டின் தலைநகருக்கு நூர் சுல்தான் என்ற பெயரை  மார்ச் 2019ல் சூட்டினார்கள். இதை மீண்டும் அஸ்தானா என்று மாற்றுவோம் என்று டோகாவேய் உறுதிமொழி அளித்திருந்தார். அந்த  உறுதிமொழியை நடை முறைப்படுத்தும் வகையில் மீண்டும்  அஸ்தானா என்ற பெயரை சூட்டு வதற்கான சட்டத்தில் கையெழுத்திட்டி ருக்கிறார். அதோடு, ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளில் இருந்து, ஏழு ஆண்டுகளாக மாற்றப் படுகிறது. ஒரு முறை ஜனாதிபதி யாக இருந்தவர், மீண்டும் தொடர்ச்சி யாக இரண்டாவது முறை ஜனாதிபதி யாவது தடுக்கப்படுகிறது. இவற்றிற் கான சட்டங்களும் இயற்றப்பட்டு ஜனாதிபதியால் கையெழுத்திடப் பட்டுள்ளன. கஜகஸ்தான் நாடாளுமன்றமும் இந்த சட்டங்களுக்கு ஆதரவு தெரி வித்துள்ளது. 


 

;