states

பாரதிராஜா உடல்நிலையில் முன்னேற்றம்

சென்னை,செப்.9- உடல் நலக்குறைவு காரண மாக கடந்த 23ஆம் தேதி தி.நகரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் இயக்குநர் பாரதிராஜா அனுமதிக்கப்பட்டார். அதன்பின் மேல் சிகிச்சைக் காக அரும்பாக்கத்தில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் 26 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரலில் அதிக மாக நீர் சேர்ந்துள்ளதால் அதற் கான சிகிச்சைகள் வழங்கப் பட்டன. இந்த நிலையில் அவர் முழு மையாக குணமடைந்து வெள்ளி யன்று (செப். 9) வீடு திரும்பினார். இதுகுறித்து மருத்துவர் சாமி கண்ணு கூறுகையில், “எங்களை உற்சாகப்படுத்த கூடிய அளவிற்கு பாரதிராஜா இருக்கிறார். அவரிடம் பேசினால் எங்களுக்கு புத்துணர்ச்சியாக இருக்கிறது. அவர் குணமடைந்து வீட்டிற்கு செல்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் இரண்டு வாரத்திற்கு மருத்துவ கண் காணிப்பு தேவை”என்றார். பாரதிராஜாவின் மகன் மனோஜ், “அப்பா ஆரோக்கி யமாக இருக்கிறார். பழைய பாரதி ராஜவாக நீங்கள் பார்க்கலாம். முன்பு போல் கேலி, கிண்டல் என்று மகிழ்ச்சியுடன் இருக்கிறார். எம்ஜிஎம் மருத்துவமனைக்கு ரொம்ப நன்றி” என்றார்.

பத்திரிக்கைகளில் மருத்துவச் செலவிற்கு பணம் இல்லை என் றெல்லாம் எழுதியுள்ளனர். என்னு டைய குடும்ப பணத்தில் இருந்து தான் மருத்துவமனைக்கு செலவு செய்து இருக்கிறோம். ஆனால், சில ஊடகங்கள் பணம் இல்லை என்று சொல்கிறார்கள். அப்படி எதுவும் இல்லை. ஊடகங்கல் உண்மை செய்திகளை மட்டும் வெளியிடுங்கள். அப்பாவை பழைய பாரதிராஜாவாக பார்க்க லாம் ஆரோக்கியமாக உள்ளார். இன்னும் 4 படங்கள் மீதி இருக்கி றது. கூடிய விரைவில் நடிக்கப் போகிறார். அதிகமாக தொலை பேசியில் பேசுவதற்கு நாங்கள் அனுமதிக்கவில்லை. மற்றபடி நேரில் வந்து பல பழைய நண்பர் கள் பார்த்து பேசினார்கள். இசை யமைப்பாளர் தீனா, இயக்குநர் ஆர்கே.செல்வமணி, நடிகை ராதா, ராதிகா உள்ளிட்ட திரைப்பிர பலங்கள் வந்து பார்த்தார்கள் எனத் தெரிவித்தார்.

;