states

அக்.11 சமூக நல்லிணக்க மனித சங்கிலி இயக்கத்தில் பங்கேற்பீர்! - ஆதரிப்பீர்!

சென்னை, அக். 9- மதவெறிப் பரப்புரை செய்து சமூக அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கையை எதிர்த்து மக்கள் ஒற்றுமையை பாதுகாக்கவும் அமைதியை நிலைநாட்டவும் அக்டோபர் 11  (செவ்வாயன்று) சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலி இயக்கத்தில் அனைத்துப் பகுதி மக்களும் பங்கேற்க வேண்டும் என்று 9 கட்சிகள் வேண்டு கோள் விடுத்துள்ளன. ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் சார்பு அமைப்புகள் மதவெறி பரப்புரை செய்து , சமூக அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை தீவிரமாக்கியுள்ளன.  மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை பலவீனப்படுத்த, மாநில உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுகின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டு மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் மதச்சார்பற்ற. ஜனநா யக கட்சிகள், அமைப்புகள் சார்பில் 11.10.2022 (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் சமூக நல்லிணக்க மனிதச்  சங்கிலி இயக்கம் நடைபெறுகிறது. வளர்ச்சி மற்றும் அமைதியை பாதுகாக்கவும், மதச்சார்பின்மையை பாதுகாக்கவும் நடைபெறும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி இயக்கத்தில் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மாணவர், இளைஞர்கள், பெண்கள், வியாபாரிகள் என  அனைத்துப் பகுதி மக்களும் பங்கேற்க வேண்டு மென கேட்டுக்கொள்கிறோம்.

சென்னையில் 11.10.2022 மாலை 4 மணிக்கு அண்ணா சாலை பெரியார் சிலையிலிருந்து துவங்கி அண்ணா சிலை, எல்.ஐ.சி. வழியாக அண்ணா சாலையில் மனிதச்சங்கிலி நடை பெற உள்ளது. இந்த மனிதச் சங்கிலியில் மதச்சார்பற்ற கட்சிகளின் மாநிலத்தலைவர்கள், இதர ஜனநாயக அமைப்புகளின் மாநிலத் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். இதே போல், மாநிலம் முழுவதும் மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது. இந்த மனிதச்சங்கிலியில் பெருந்திராளாக பங்கேற்க அனைத்துப்பகுதி மக்களையும் அன்புடன் அழைக்கிறோம் என்று அறிக்கையில் கூறியுள்ளனர். இந்த அறிக்கையில் கி. வீரமணி தலைவர், திராவிடர் கழகம், கே.எஸ். அழகிரி தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, வைகோ  பொதுச் செயலாளர்,  மதிமுக, கே. பாலகிருஷ் ணன் மாநில செயலாளர், சிபிஎம், இரா. முத்தரசன்  மாநில செயலாளர், சிபிஐ, தொல். திருமாவளவன், எம்.பி., தலைவர்,   விசிக, கே.எம்.காதர்மொய்தீன் தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், எம்.எச். ஜவாஹிருல்லா தலைவர்,மனிதநேய மக்கள் கட்சி, தி. வேல்முருகன் தலைவர்,  தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். 

இந்த இயக்கத்துக்கு ஆதரவாக  களம் காணும் கட்சிகள்

1. தேமுதிக 2. இந்திய தேசிய லீக் 3. எஸ்.டி.பி.ஐ. 4. நாம் தமிழர் கட்சி 5. சிபிஐ (எம்.எல்- விடுதலை) 6. தமிழ்ப் புலிகள் கட்சி 7. அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகம் 8. அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ்  9. தமிழக விடியல் கட்சி 10. பீமாராவ் குடியரசு கட்சி 11. மனிதநேய ஜனநாயக கட்சி 

மனிதச் சங்கிலியை ஆதரிக்கும் சனநாயக இயக்கங்கள்

1. திராவிடர் விடுதலை கழகம், 2. த.பெ.தி.க, 3. மே17 இயக்கம், 4. சிஐடியு, 5. ஏஐடியுசி, 6. எல்.எல்.எப்., 7. தமிழ்நாடு விவசாயிகள்  சங்கம், 8. அனைத்திந்திய ஜனநாயக மாதர்  சங்கம், 9. இந்திய மாதர் தேசிய சம்மேளனம், 10. மக்கள் மன்றம், 11. புலிப்படை, 12. தமிழ்நாடு இளைஞர் சங்கம், 13. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், 14. அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், 15. மக்கள் அதிகாரம், 16. டிசம்பர் 3 இயக்கம், 17. காஞ்சி மக்கள் மன்றம், 18. இந்திய மாணவர் சங்கம், 19. அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், 20. தமிழ்நாடு மாணவர்கள் இளையோர் கூட்டமைப்பு, 21. தமிழ்நாடு சமத்துவ தையல்  தொழிலாளர் நலச் சங்கம், 22. தமிழ்நாடு படைப்பாளிகள் கூட்டமைப்பு, 23 தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம், 24. இந்திய ஜவுஹித் ஜமாத், 25. மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகம், 26. தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்.

 

;