கொச்சி, செப்.11- கடலோர நிலத்தை மீனவர்களுக்கு அந் நியமாக்கும் நீலப் பொருளாதாரத் திட்டத் துக்குப் பிறகு, ஆழ்கடலில் மீன்பிடிப்பதையும் ஏகபோகங்களுக்கு எழுதிக் கொடுக்கிறது ஒன்றிய பாஜக அரசு. இதற்காக சிறப்பு பொரு ளாதார மண்டலத்தில் (EEZ) 12 முதல் 200 கடல் மைல்கள் வரை மீன்பிடிக்கும் கப்பல் களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படும். இதனால், இப்பகுதியில் மீன்பிடிப்பது பாரம் பரிய மீனவர்களுக்கும், சிறு படகு உரிமை யாளர்களுக்கும் அந்நியமாகிவிடும். மத்திய மீன்வளத் துறையின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஆழ்கடல் மீன் பிடி தொடர்பான வரைவில் பாரம்பரிய மீன வர்களை புறக்கணிக்கும் திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. இதன்படி ஆழ்கடல் மீன்பிடிப் புக்கு 24 மீட்டருக்கு மேல் நீளமுள்ள படகு களுக்கு ரூ.5 லட்சமும், 15-24 மீட்டர் நீளமுள்ள படகுகளுக்கு ரூ.1 லட்சமும் அனுமதிக் கட்டண மாக செலுத்த வேண்டும்.
12--15 மீட்டர் வரை யிலான படகுகளுக்கு ரூ.50,000 செலுத்த வேண் டும். அனுமதி காலம் இரண்டு ஆண்டுகள். சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் மீன் பிடி நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவது என்ற பெயரில் முன்மொழிவுகள் இருந்தாலும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆழ்கடலில் மீன்பிடிக்க வசதி செய்வதே இதன் நோக்க மாக உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இயந்திரப் படகுகள் புதிய நடத்தை விதிகளுக்கு உட்பட்ட தாக இருக்கும். படகுகளில் பயன்படுத்த வேண்டிய உபகரணங்கள், அண்டை நாடு களில் உள்ள துறைமுகங்களைப் பயன்படுத்து வதற்கான விதிகள், பல்வேறு வகையான வலைகளைப் பயன்படுத்துதல் போன்ற சிறிய மீன்பிடித் துறையை பாதிக்கக்கூடிய பல முன் மொழிவுகள் வரைவில் உள்ளன. வரைவு திட் டத்தின் மீதான கருத்துக்களை சமர்ப்பிப்பதற் கான கடைசி தேதி ஆகஸ்ட் 30 ஆகும்; ஆனால் இந்த வரைவுத் திட்டம் ஆகஸ்ட் 29 அன்று தான் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
ஏமாற்றம்
இந்த திட்டங்கள் இந்திய கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தின் ஒரு பகுதியாக இல்லை என்பது ஏமாற்றமளிக்கிறது என்கிறார் மீன்வள நிபுணரும் முன்னாள் சிஎம்எப்ஆர்ஐ முதன்மை விஞ்ஞானியுமான கே சுனில் முக மது. சிறு மீனவர்களுக்கு சுமை ஏற்படாத வகை யில் உரிமக் கட்டணத்தை பாதியாக குறைக்க வேண்டும். அறிவியல் ஆலோசனையின் அடிப் படையில் உரிமங்களின் எண்ணிக்கையை முறைப்படுத்த வேண்டும் என்றார்.
வேலைநிறுத்தம்
குறுக்கு வழியில் ஏகபோகத்தின் கைகளில் கடலை மொத்தமாக ஒப்படைத்துவிட ஒன்றிய அரசு முயற்சிக்கிறது என்கிறார் அகில இந்திய ஆழ்கடல் மீனவர் சங்க தலைவர் சார்லஸ் ஜார்ஜ். இந்த உத்தரவை திரும்பப் பெற வலி யுறுத்தி படகு உரிமையாளர்கள் மற்றும் மீன வர் சங்கத்தினர் வேலைநிறுத்தப் போராட் டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர் கூறி னார்.