states

img

கேரள உள்ளாட்சி தேர்தலில் சேதமடைந்த யுடிஎப்.... குழப்பத்தில் துவண்ட முன்னணி தலைவர்கள்....

திருவனந்தபுரம்:
கேரளத்தில் உள்ளாட்சித் தேர்தலில்உருக்குலைந்த யுடிஎப் கூட்டணிக் கட்சிகள் காங்கிரஸை கடும் நெருக்கடியில் தள்ளியுள்ளன. சேதாரத்தை ஈடுகட்டும் வழி தெரியாமல் துவண்டு கிடக்கும் தலைவர்கள் காங்கிரஸ் தலைமையை மாற்றுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனர்.

முல்லப்பள்ளி ராமச்சந்திரனை கேபிசிசி தலைவர் பதவியில் இருந்து நீக்க முஸ்லிம் லீக், ஆர்எஸ்பி அழுத்தம்கொடுத்து வருகின்றன. சனியன்று (டிச.19) நடந்த யுடிஎப் கூட்டத்திற்கு முன்னதாக லீகும் ஆர்எஸ்பியும் காங்கிரஸ் தலைவர்களிடம் நேரடியாக இப்பிரச்சனையை எழுப்பியிருந்தன. முதலில் உயர்மட்ட தலைமைக்கு ஒரு கடிதம்அனுப்புவதும், தலையீடு இல்லாவிட் டால், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்திக்கவும் லீக் திட்டமிட்டுள்ளது. ஆர்எஸ்பி தலைவர் ஷிபுபேபிஜோன் ஊடகங்களிடம் பகிரங்கமாக கூறுகையில், தற்போதைய நிலைமைகுறித்து தனக்கு ஆழ்ந்த கோபம் இருப்பதாகவும், அது குறித்து முன்னணிக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தலைமையின் ஒற்றுமையின் மையே தோல்விக்கு வழிவகுத்தது. இதற்கு காங்கிரஸ் பொறுப்பேற்க வேண்டும். இப்படியே சென்றால் முன்னேற முடியாது. முதல் படியாக தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும். தோல்வியைமதிப்பிடுவதற்காக நடந்த யுடிஎப் தலைவர்களின் கூட்டத்தில் முன்னணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இவற்றை வெளிப்படையாக தெரிவித்தன.சிறுபான்மையினரின் நம்பிக்கையை மீண்டும் பெற நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவை வலியுறுத்தின. பாஜகவுக்கு எதிராக வலுவான நிலைப்பாட்டை எடுக்காதது வினையாக முடிந் துள்ளது. மலபாரில் மட்டும் ஏற்பட்ட யுடிஎப்-ஜமாத்-இ-இஸ்லாமி கூட்டணி குறித்த காங்கிரஸ் தலைவர்களின் முரண்பாடான எதிர்வினைகளால் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டதாக பி.கே. குஞ்ஞாலிக்குட்டி விமர்சித்தார். கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை வழங்கிய பின்னர் அங்கு காங்கிரஸ்காரர் கள் போட்டியிட்டது குறித்தும் விமர் சனங்கள் எழுந்துள்ளன.

கேரள காங்கிரசின் ஜோசப் பிரிவு மட்டுமே கூட்டத்தில் காங்கிரஸைத் தாக்கவில்லை. ஜோஸ் கே.மாணி வெளியேறியதால் எந்த கெடுதலும் ஏற்பட்டுவிடவில்லை என்று தெரிவித்த மோன்ஸ்ஜோசப், உள்ளாட்சி தேர்தலில் தங்கள்இடங்களைத் தக்க வைத்துக் கொண்டதாகவும் தெரிவித்தார்.யுடிஎப் கூட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலும்லீகின் ஆதிக்கம் தெளிவாகத் தெரிந்தது.யுடிஎப் ஒருங்கிணைப்பாளர் எம்.எம்.ஹசன், முல்லப்பள்ளி, உம்மன் சாண்டிஆகியோர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ்சென்னித்தலாவின் அறிமுக உரைக்குப்பிறகு, குஞ்ஞாலிக்குட்டி கேள்விகளுக்கு பதிலளித்தார். எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலா கூறுகையில், ‘சேதம் ஏற்பட்டுள்ளதாக ஒப்புக் கொள்கிறேன், அது சரி செய்யப்படும்’ என்று கூறினார்.

சட்டமன்றத் தேர்தலில் அடிப்படைவாத அமைப்புகளின் ஆதரவுடன் யுடிஎப்ஆட்சிக்கு வருமா என்ற கேள்விக்கு எந்த தலைவரும் பதிலளிக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலா, யுடிஎப்-க்கு வெளியேஉள்ள கட்சிகளுடன் கைகோர்க்க இதுவரை முடிவு செய்யவில்லை என்று கூறியபோது, பி.கே. குஞ்ஞாலிக்குட்டிவெல் பேர் பார்ட்டி குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் நழுவினார்.21 ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் யுடிஎப் கூட்டங்கள் நடைபெறும். ஒருங்கிணைப்புக் குழு ஜனவரி9 ஆம் தேதி கூடுகிறது. அடுத்த சட்டமன்றத் தேர்தலில் யுடிஎப் மகத்தானவெற்றியைப் பெறும் என்று சென்னிதாலா கூறினார்.அதே நேரத்தில், தேர்தல் பின்னடைவுகளில் இருந்து மீள முடியாமல் காங்கிரஸ் துவண்டு கிடக்கிறது. கே முரளீதரன், கே சுதாகரன் ஆகியோரை தலைமை தாங்க அழைக்கவேண்டும் என்று கோரி மாநிலத்தில் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

கொல்லத்தில், டி.சி.சி தலைவர் பிந்துகிருஷ்ணாவை பாஜக ஏஜெண் டாக சித்தரித்தும் சுவரொட்டி ஒட்டப் பட்டுள்ளது. முல்லப்பள்ளியை கைவிடுவது நல்லது என்று ராஜ்மோகன் உன் னித்தான் தொலைக்காட்சி சேனல்களில் கூறினார். ஒரு நாளைக்கு மூன்று முறை பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினால் தப்பிக்க முடியாது என்று இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஷாபி பரம்பில், சென்னிதலாவை கடுமையாக சாடினார்.இந்நிலையில் காங்கிரஸை யார் வழிநடத்த வேண்டும் என்பதை தீர்மானிக்கும் மையமாக லீக் மாறிவிட்டதா? என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது முகநூல் பதிவில் கேள்விஎழுப்பியுள்ளார். முதல்வரின் இந்தகருத்து கேரளத்தில் பெரும் விவாதமாகிஉள்ளது.

;