states

img

கேரளத்தில் ‘ஷிகெல்லா‘ நோய்....   பலி-1.... சிகிச்சையில் இருவர்....

கோழிக்கோடு:
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கோட்டாம்பரம்பு பகுதியில் ‘ஷிகெல்லா’ நோய் பாதிப்புக்குள்ளான ஒரு குழந்தை உயிரிழந்தது. கோட்டாம்பரம்பு, முண்டிகல்தாசம், செல்லவூர் பகுதிகளில் நூறுக்கும் மேற்பட்டோருக்கு நடத்திய சொதனையில் அறிகுறிகள் காணப்பட்ட 15பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவர் தவிர மற்றவர்கள் வீடு திரும்பினர்.

அசுத்தமான நீர், தரமற்ற உணவு மற்றும் பாதிக்கப்பட்டவர்களுடனான தொடர்புமூலம் ஷிகெல்லா பரவுகிறது. அதிக காய்ச்சல், வயிற்று வலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை இதன் அறிகுறிகளாகும். பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புகொண்ட ஒன்று முதல் ஏழு நாட்களுக்குள் அறிகுறிகள் தோன்றத் தொடங்குகின்றன.நோய் அறிகுறிகள் தென்பட்ட பகுதியிலிருந்து நீர் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டன. சுகாதாரத் துறையைச்சேர்ந்த உயர் மட்ட குழு ஒன்று இப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்துள்ளது. தனிப்பட்டசுகாதாரம், கைகளை சுத்தமாக வைத்திருத்தல், கொதிக்கவைத்த தண்ணீரைமட்டுமே குடிப்பது, சூடான உணவை மட்டும் சாப்பிடுவது ஆகியவை நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் அடங்கும்.

;