states

காங். தலைவர் பதவிக்கு அசோக் கெலாட் போட்டி

கொச்சி, செப். 23 - காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக இராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டி யிடப்போவதாக வெள்ளிக்கிழமை தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ஆம் தேதி நடை பெறுகிறது. போட்டியிருந்தால் வாக்குப் பதிவு நடைபெறும். அதன் முடிவு  அக்டோபர் 19-ஆம் தேதி அறிவிக்கப் படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. ராகுல்காந்தி நடத்தி வரும் பாத யாத்திரையில் பங்கேற்பதற்காக கொச்சி வந்த கெலாட் இதைத் தெரி வித்தார். இதற்கிடையில் வியாழனன்று செய்தியாளர்களிடம் பேசிய கெலாட், தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்கவேண்டும் என வற்புறுத்தப் போவதாகக் கூறியிருந்தார். இதற்கிடையில், காங்கிரஸ் தலை வர் பதவிக்கு யார் யார் போட்டியிடு வார்கள் என்ற ஊகங்களுக்கு மத்தி யில் தாம் போட்டியிடப்போவதாக அசோக் கெலாட் கொச்சியில் வெள்ளிக்கிழமை அறிவித்தார். ராகுல் காந்தியுடன் கட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்திய கெலாட். தலைவர் பொறுப்பிற்கு தாம்  போட்டியிடப் போவதில்லை என்றும், யாரும் போட்டியிட சுதந்திரம் உண்டு  எனக் கூறியதையும் கெலாட் தெளிவு படுத்தினார். வேட்புமனு தாக்கல் செய்யும் தேதி இராஜஸ்தான் வந்த பிறகு முடிவு செய்யப்படும் என்று கூறினார். தாங்கள் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், முதல்வர் யார் என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த கெலாட், கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராஜஸ்தான் மாநிலப் பொறுப்பாளராக இருந்த அஜய் மாக்கன் ஆகியோர் அது குறித்து தீர்மானிப்பார்கள் என்றார். சசி தரூர் உட்பட இன்னும் சிலர் களமிறங்கலாம் என கூறப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதே என்ற கேள்விக்கு பதிலளித்த  கெலாட், இது ஒரு பிரச்சனை அல்ல.  கட்சித் தேர்த லுக்குப் பிறகு கட்சியை அனைத்து மட்டங் களிலும் வலுப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதன் மூலமே வலுவான எதிர்க்கட்சி யாக உருவெடுக்க வேண்டும்.  ‘ஒரே ஆள், ஒரே பதவி’ என்ற உதய்பூர் தீர்மானத்தின் உணர்வை ஒவ்வொருவரும் நிலைநிறுத்த வேண்டும் என்றார். 

;