திருவனந்தபுரம், ஜூலை 6- கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு மத்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள் ளது. இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங் களிலும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகள் மற்றும் நகரங்களில் நிலச்சரிவு, மண்சரிவு, மழை வெள்ளம் மற்றும் நீர் தேங்க வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் மற்றும் அரசு அமைப்புகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.