states

எம்.வி.ஜெயராஜன் மீது தாக்குதல் முயற்சி...

கண்ணூர்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கண்ணூர் மாவட்டச்செயலாளர் எம்.வி.ஜெயராஜ னைத் தாக்க முஸ்லிம் லீக்  கட்சியினர் முயன்றனர்.

திங்களன்று இரவு 7 மணியளவில் மயில் பஞ்சாயத்தில் உள்ள நெல்லிகபாலத்தில் லீக் கட்சியினர் இருபது பேர்எம்.வி.ஜெயராஜனின் வாகனத்தை கம்புகள் மற்றும் கொடிய ஆயுதங்களுடன் தடுத்து தாக்கத் தொடங்கினர்.ஓட்டுநர் வாகனத்தை விரைவு படுத்தியதால் தலைவர்கள் தப்பினர். தேர்தலின் போது முஸ்லீம் லீக் உறுப்பினர்களால் தாக்கப்பட்ட எல்டிஎப் ஊழியர் முகமதுத்வாய்ப்பின் வீட்டிற்கு தலைவர்கள் சென்று கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடந்தது.

;