states

img

பாலியல் வன்முறை கூடாரமாகும் குஜராத்

அகமதாபாத் மோடி பிரதமர் ஆன பின்பு நாட்டில் பெண்கள், சிறுமிக ளுக்கு பாதுகாப்பு இல்லா சூழல் நிலவி வருகிறது. குற்றச்சம்பவங் கள் இல்லாத நாட்களே இல்லாத நிலைமையும் உள்ளது. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங் கள் மிக மோசமான அளவில் அரங்கேறி வருகிறது. கடந்த வாரம் (செப். 19) பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தின் தாஹோத் மாவட் டத்தின் தோரானி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளி வளா கத்தில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமி பாலியல் துன்புறுத்த லுக்கு பலியாகியுள்ளார். 

இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு ஜே.டி.கன்சாரா விசா ரணை முடிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பள்ளி முடிந்து சிறுமி வீடு திரும்பாததால் பெற் றோர் மற்றும் உறவினர்கள் இரவு வரை பள்ளி உள்ளிட்ட இடங்க ளில் தேடியுள்ளனர். இரவு 7 மணிய ளவில் பள்ளி கட்டிடத்தின் பின்புறம் உள்ள வளாகத்தில் மயங்கிய நிலை யில் சிறுமி மீட்கப்பட்டுள்ளார். மயக்க நிலையில் இருந்ததால் குழந்தை லிம்கேடா சிவில் மருத் துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டார். ஆனால் மருத்துவர்கள் சிறுமி இறந்து பல மணிநேரம் ஆகி விட்டதாகக் கூறியுள்ளனர். விசார ணையில் பள்ளியின் தலைமை ஆசி ரியர் கோவிந்த் நட் (55) சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்திற்கு முயற்சி செய்துள்ளதாகவும், சிறுமி தடுத்து கூச்சலிட்டதால், கோவிந்த் நட் சிறுமியை கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளதும் உறுதி யாகியுள்ளன. இதனையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் கோவிந்த் நட்டை கைது செய்துள் ளோம்” என அவர் கூறினார்.

பாஜகவைச் சேர்ந்தவர்

6 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்து கொன்ற பள்ளியின் தலைமை ஆசிரியர் கோவிந்த் நட் பாஜகவைச் சேர்ந்த வர் என தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் மாநில பாஜக மூத்த தலை வரும், முன்னாள் அமைச்சருமான அர்ஜுன் சிங்கிற்கு கோவிந்த் நட் மிக நெருக்கமானவர். ஆர்எஸ்எஸ் - விஎச்பி நிகழ்ச்சிகளில் முக்கிய தலைவராக பங்கேற்றுள்ளார். ஆர் எஸ்எஸ், பாஜக, விஎச்பி நிகழ்வுக ளில் கோவிந்த் நட் பங்கேற்ற புகைப் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பாலியல் குற்றம் செய்பவர்கள் அனைவரும் பாஜகவினர் தான்

குஜராத் மாநிலத்தில் பெண்க ளுக்கு எதிராக நிகழும் பெரும்பா லான குற்றச் சம்பவங்களில் பாஜகவினர் மற்றும் பாஜகவுக்கு நெருக்கமானவர்களே கைது செய்யப்படுகின்றனர். கடந்த ஜூலை மாதம் சவுராஷ்டிராவில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தின் தலைமை ஆசிரியரால் 21 வயது மிக்க மாணவி பாலியல் பலாத்கா ரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் பாஜக நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். 

அதே போல பதானில் சிறு மியை பாலியல் பலாத்காரம் செய்த உறவினரை பாதுகாத்த பாஜகவின் இளைஞரணி நிர்வாகி கவுரவ் சவுத்ரி சமீபத்தில் கைது செய்யப் பட்டார்.  கவுரவ் சவுத்ரிக்கும் சிறுமி  பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டதில் தொடர்பு இருப்பதாக தகவல் ஒன்றும் வெளியாகி யுள்ளது. தற்போது பாஜகவுக்கு  மிக நெருக்கமான தலைமை ஆசி ரியரால் 6 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொல் லப்பட்டுள்ளார். பாலியல் குற்ற வாளிகளின் கூடாரமாக பாஜக கட்சி ஆகியுள்ள நிலையில், பெண்கள் பாதுகாப்பு பற்றி அடிக்கடி பேசும் பிரதமர் மோடி அமைதியாக இருப் பது சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.