states

img

ஒடிசா ரயில் விபத்து: 3 பேர் கைது

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக மூத்த பொறியாளர் உட்பட 3 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில், பஹாநகா பகுதியில் கோரமண்டல் விரைவு ரயில், பெங்களூர் – ஹெளரா விரைவு ரயில் மற்றும் சரக்கு என 3 ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய கோர விபத்து கடந்த ஜூன் 2-ஆம் தேதி இரவு நிகழ்ந்தது.இவ்விபத்தில் மொத்தம் 294 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த கோர விபத்து தொடர்பான விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது. விபத்து நடந்தபோது பணியில் இருந்த சிலரை சிபிஐ தங்களின் வளையத்திற்குள் கொண்டுவந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ரயில் விபத்து தொடர்பாக மூத்த பொறியாளர் அருண்குமார் மொஹந்தா, பொறியாளர் முகமது அமீர்கான், தொழில்நுட்பவியலாளர் பப்புகுமார் ஆகியோரை சிபிஐ கைது செய்துள்ளது.