states

img

சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசியது குற்றமாம் ராகுல் காந்தி ஆஜராக உ.பி., நீதிமன்றம் உத்தரவு

லக்னோ மக்களவை தேர்தல் பிரச் சாரத்தின் பொழுது ஹரி யானாவில் காங்கிரஸ்  மூத்த தலைவர் ராகுல் காந்தி, “காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்  தால் நாடு தழுவிய சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்.  அதன் பிறகு பொருளாதார மற்  றும் நிறுவனங்களின் கணக்கெ டுப்பை நடத்துவோம்” என அவர்  கூறினார்.

ராகுல் காந்தியின் கருத் துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக் கக் கோரியும் பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த பங்கஜ் பதக் என்ற நபர் பரேலி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

இதுதொடர்பாக பங்கஜ்  பதக் தாக்கல் செய்த மனுவில்,  “ராகுல் காந்தியின் கருத்துக்கள் நாட்டில் அமைதியின்மை, சமூகங்களுக்கு இடையிலான பிளவு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே இந்த விவ காரத்தில் நீதித்துறை தலையிட  வேண்டும்” என கூறப்பட்டுள் ளது. இம்மனுவை உடனடியாக  விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பரேலி மாவட்ட நீதி மன்றம், “வரும் ஜனவரி 7ஆம்  தேதி ராகுல் காந்தி நீதிமன் றத்தில் ஆஜராகி, தனது தரப்பு விளக்கத்தை தர வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளது.

எம்.பி., பதவியை பறிப்பதே குறி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதி ராக வழக்கு தொடர்ந்த பங்கஜ்  பதக் பாஜகவுக்கு மிக நெருக்க மானவர் எனத் தெரிகிறது. முத லில் ராகுல் காந்திக்கு எதிராக  உத்தரப்பிரதேசத்தில் உள்ள  எம்.பி., எம்எல்ஏ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன் றத்தில் இதே மனுவை பங்கஜ்  பதக் தாக்கல் செய்தார். ஆனால் இந்த மனுவை நீதிமன்றம்  தள்ளுபடி செய்தது. அதனால் மனுதாரர் பரேலி மாவட்ட நீதி மன்றத்தை அணுகியதாக கூறப்படுகிறது. இதன்மூலம் ராகுல் காந்தியின் எம்.பி.,  பதவியை பறிக்கவே பாஜக  பங்கஜ் பதக் மூலம் வழக்கு  தொடர்ந்துள்ளது நிரூபணமாகி யுள்ளது.