states

img

வாரணாசி: காமெடியன் ஷியாம் ரங்கீலாவின் வேட்புமனு நிராகரிப்பு!

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து வேட்புமனுத் தாக்கல் செய்து பிரபல காமெடியன் ஷியாம் ரங்கீலாவின் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏற்கனவே 4 கட்டங்கள் முடிந்த நிலையில், 5-ஆம் கட்ட தேர்தல் வரும் மே 20-ஆம் தேதி நடைபெற உள்ளது. 6-ஆம் மற்றும் 7-ஆம் கட்ட தேர்தல்கள் மே 25 மற்றும் ஜூன் 1-ஆம் தேதிகள் நடைபேறவுள்ளது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிட கடந்த மே 14-ஆம் தேதி பிரதமர் மோடி வேட்புமனுத் தாக்கல் செய்தார். இதை அடுத்து வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து பிரபல காமெடியன் ஷியாம் ரங்கீலாவும் வேட்புமனுத் தாக்கல் செய்தார். தற்போது ஷியாம் ரங்கீலாவின் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
இதுவரை வாரணாசி தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 55 வேட்புமனுக்களில், 36 வேட்புமனுக்களை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.