உத்தரபிரதேச மாநில அரசுக்கு தேசிய பசுமை தீரப்பாயம் 120 கோடி அபராதம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உத்தரபிரதேச நீர் நிலைகள் மிக மாசடைந்துள்ளது குறித்த வழக்கில் கடந்த மாதம் 30 தேதியுடன் விசாரணை முடிவடைந்தது. உத்தரபிரதேசத்தில் நீர் மாசுபடுதலை கட்டுப்படுத்துவதில் அதிகாரிகள் மிக கடுமையாக தோல்வியைச் சந்தித்திருப்பதாக தீர்ப்பாயம் உறுதி செய்தது. இந்நிலையில் நீர்நிலை மாசுபாட்டை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்காத யோகி ஆதித்யநாத் தலைமையிலான அம்மாநில அரசுக்கு ரூ.120 கோடி அபராதம் விதித்து தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதி சுதிர் அகர்வால் தலைமையிலான அமர்வு, அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், எந்தெந்த தொழிற்சாலைகளுக்கு பொதுவான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. மேலும், உயிரி சீரமைப்பு பணிகளுக்கு பிறகு நீரின் தரம் நேர்மறையான முடிவுகளை காட்டவில்லை என்றும் தீர்ப்பில் சுட்டிக்காட்டி உள்ளது. மேலும் ரூ.120 கோடியை ஒரு மாதத்திற்குள் செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.