திருப்பதி திருப்பதி லட்டுகளில் நெய் மூல மாக மாடு உள்ளிட்ட விலங்குக ளின் கொழுப்பு கலப்படம் செய் யப்பட்டது தொடர்பாக உச்சநீதிமன்றத் தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணி யன் சாமி, திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவரான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி., சுப்பா ரெட்டி உள் ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த மனுக்களை நீதிபதிகள் பி.ஆர்.கவாய், விஸ்வ நாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு திங்களன்று விசாரித்தது.
“திருப்பதி லட்டுகளில் விலங்கு கொழுப்பு கலப்படம் செய்யப் பட்டுள்ளதாக பொதுவெளியில் பகி ரங்கமாக கூறியிருப்பது மிக மோச மானது. இது மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயல்” என சுப்பிர மணியன் சாமி தரப்பில் வாதிடப் பட்டது. இதற்கு ஆந்திரா மாநில அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறி ஞர் முகுல் ரோத்தகி கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், “திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சுப்பிரமணி யன்சாமி எப்படி மனுத்தாக்கல் செய்ய முடியும்? யார் அனுமதி தந்தது?” என கேள்வி எழுப்பினார்.
இடையில் குறுக்கிட்ட உச்சநீதி மன்ற நீதிபதிகள், “திருப்பதி லட்டு தயாரிப்புக்கான நெய்யில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பொதுவெளியில் பேசி யது ஏன்? சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள ஆந்திர முதல்வர், முடிவு வருவதற்கு முன்பே பொதுவெளியில் பேசியது ஏன்? சர்ச்சைக்குரிய நெய்தான் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்டது என்ப தற்கு என்ன ஆதாரம் உள்ளது? அரசி யல் அமைப்பு சட்டப்படியான பதவி யில் உள்ள முதல்வர் கடவுளை வைத்து அரசியல் செய்யக்கூடாது. திருப்பதி லட்டில் கலப்படம் குறித்து கடந்த ஜூலை மாதம் ஆய்வு செய்து அதன் அறிக்கையை டிசம்பர் மாதம் வெளியிட்டதன் காரணம் என்ன? முதல்வர் என்ற பொறுப்பான பதவி யில் இருக்கும் நீங்கள், ஏன் இந்த விவகாரத்தை நேரடியாக ஊடகங்க ளிடம் எடுத்துச் சென்றீர்கள்? இந்த விவகாரத்தில் திருமலை - திருப்பதி தேவஸ்தான (TTD) நிர்வாக அதி காரியே முதல்வரின் குற்றச்சாட்டில் முரண்படுகிறார். புகார்கள் இருந்தால், ஒன்றிரண்டு டேங்கர்களுக்குப் பதிலாக ஒவ்வொரு டேங்கரிலிருந்தும் மாதிரியை எடுத்திருக்க வேண்டும். ஆந்திரா முதல்வரின் செயல் தேவை யில்லாதது” என ஆந்திர முதல்வர் சந்திரபாபுவுக்கு உச்சநீதிமன்ற நீதி பதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ்
தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதி பதிகள், “லட்டு சர்ச்சை தொடர்பாக ஆந்திர மாநில அரசு சிறப்பு விசார ணைக்குழு அமைத்துள்ளது. இந்த விசாரணைக் குழுவே போதுமானதா? வேறு ஒரு விசாரணை தேவையா” என்பது குறித்து ஒன்றிய அரசு பதி லளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு, இந்த வழக்கின் அடுத்த கட்ட விசார ணையை அக்டோபர் 3க்கு ஒத்தி வைத்தனர்.