வியாழன், செப்டம்பர் 23, 2021

politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

இந்தியாவில் நவீன தாராளமய பொருளாதார சீர்திருத்தங்கள் இரண்டு இந்தியாக்களை உருவாக்கியுள்ளன. ஒன்று, மிகச்சிலரை உள்ளடக்கிய ஒளிரும் இந்தியா; இன்னொன்று, பெரும்பான்மையோர் உள்ளடக்கிய துன்புறும் இந்தியா. 2014 ஆம் ஆண்டு கார்ப்பரேட்டுகளும் மதவாத சக்திகளும் கை கோர்க்கும் புதிய சூழல் உருவானது.  இதன் விளைவாக தேசிய வளங்கள் பகற் கொள்ளை அடிக்கப்படுகின்றன. மக்களின் ஒற்றுமையும் தேசத்தின் ஒற்றுமையும் சிதைக்கப்படுகின்றன.

                                        *******************

தேசிய மாதிரி ஆய்வு:

ஒவ்வொரு குடும்பத்தின் சராசரி கடன் கிராமங்களில் ரூ.60 ஆயிரம். நகரங்களில் ரூ.1.20 லட்சம்.70 சதவீத விவசாய குடும்பங்கள் ஒரு ஹெக்டேருக்கும் குறைவாகவே நிலம் வைத்துள்ளனர்.தேசிய மாதிரி ஆய்வு தரவுகள் கிராமம் மற்றும் நகரங்களில் இணைத்து 57 சதவீத குடும்பங்கள் கடனில் இருப்பதாக தெரிவிக்கிறது. இது பெருந்தொற்றின் பேரழிவுக்கு முன்! ஊரடங்குகள்/இரண்டாவது அலை/வேலை இழப்புகள்/விலைவாசி உயர்வு என பல நிகழ்வுகள் உயிர் வாழ்வதையே சாத்தியமற்றதாக ஆக்கிவிட்டன. ஏழை குடும்பங்களுக்கு உடனடியாக நேரடி நிதி உதவி தாருங்கள்.

                                        *******************

ஆலை உற்பத்தி பிரிவில் வேலை வாய்ப்புகள் சரிவு தொடர்கிறது.மோடியின் பொய் பிரச்சாரமும் வாய்ச்சவடாலும் பெருந்தொற்றுக்கு முன்பு இருந்த பொருளாதார நிலை அடைந்துவிட்டதாக கதை அளக்கின்றனர். அப்பட்டமான பொய். 
2016 ஆம் ஆண்டு பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட காலத்திலிருந்து ஆலை உற்பத்தி 3-ல் 2 பங்கு வீழ்ந்துவிட்டது. இதனால் வேலை வாய்ப்புகளும் வீழ்ச்சி. பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடி நிதி உதவியும் இலவச உணவு பொருட்களும் தாருங்கள்.

;