india

img

மும்பை திரைப்பட ஸ்டூடியோவில் தீவிபத்து!

மும்பை, பிப்.02-
மும்பையில் திரைப்பட ஸ்டூடியோவில் திடீரென ஏற்பட்ட தீவிபத்து அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை கோரேகான் பகுதியில் உள்ள திரைப்பட ஸ்டூடியோவில் திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாக  தீவிபத்து ஏற்பட்டது.
மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த மரக்கட்டை பகுதியிலும், அங்கு அமைக்க பட்டிருந்த செட்களிலும் தீ மளமளவென பரவியது.
தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடிவருகின்றனர்.

;