india

img

தபால் துறை தேர்வு ரத்து செய்யப்படும் - மத்திய அமைச்சர் அறிவிப்பு

தபால் துறை தேர்வில் தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தேர்வு ரத்து செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, தபால் துறையில் தபால் அலுவலர் மற்றும் உதவியாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில், கேள்விகள் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே அச்சடிக்கப்பட்டு இருந்தது. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டன. இதை அடுத்து, மத்திய அரசின் இந்த நடவடிக்கையை, தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

தமிழக எம்.பி.க்கள் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தொடர்ந்து இது தொடர்பாக குரல் கொடுத்தனர். மாநிலங்களவையில் திமுக சார்பில் திருச்சி சிவா, அதிமுக சார்பில் நவநீத கிருஷ்ணன் உள்ளிட்டோர் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். மேலும் இந்த விவகாரம் குறித்து தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். 

இந்நிலையில், தபால் துறை தேர்வு விரைவில் ரத்து செய்யப்படும்.  விரைவில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகள் அனைத்திலும் இந்த தேர்வு மீண்டும் நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
 

;