india

வங்கிகளுக்கான  வட்டி விகிதம் குறைப்பு

புதுதில்லி,அக்.4- வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதமான ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. இதைத்தொடர்ந்து 5வது முறையாக வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெப்போ விகிதம் போன்ற வெளிப்புற அளவுகோல்களின் அடிப்படையில், வங்கிக் கடன்களை வழங்குமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் செலாவணிக் கொள்கைக் குழு கூட்டத்திற்கு பிறகு வெளியிடப்பட்ட அறிவிப்பில் ,ரெப்போ விகிதம் கால் சதவீதம் அல்லது 25 அடிப்படைப் புள்ளிகள் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. ரெப்போ விகிதம் என்பது, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய கால கடன் வட்டி விகிதம் ஆகும். தற்போது இந்த விகிதம் 5.15 சதவீமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல, வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு அளிக்கும் குறுகிய கால கடன் வட்டி விகிதமான ரிவர்ஸ் ரெப்போ, 4.9 சதவீதம் என்ற அளவிலேயே நீடிக்கிறது. ரெப்போ விகிதம் தொடர்ந்து ஐந்தாவது முறையாக குறைக்கப்பட்டுள்ளது.

;