india

img

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதம் - இந்தியா ரேட்டிங்ஸ் மதிப்பீடு

நடப்பு 2019-20 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 6.7 சதவிகிதமாக இருக்கும் என இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இதற்கு முன்பு இந்த நிறுவனம் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 7.3 சதவீதமாக இருக்கும் என்று கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார மந்தமான நிலை, மக்களின் தேவை மற்றும் நுகர்வு திறன், முதலீடுகளில் ஏற்பட்டுள்ள சரிவு மற்றும் பருவநிலை உள்ளிட்ட காரணங்களால் உற்பத்தி குறையும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளர்ச்சி விகிதத்தை முன்பு கணித்ததிலிருந்து தற்போது குறைத்து அறிவித்துள்ளது. தொடர்ச்சியாக, மூன்று ஆண்டுகளாக இந்த வளர்ச்சி குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் காலாண்டு அடிப்படையிலும் இந்த வளர்ச்சி விகிதமானது கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த ஐந்து காலாண்டுகளிலும் வளர்ச்சி குறைந்து, 5.7 சதவிகிதமாக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இதே போல சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான மூடிஸ் நிறுவனம், நடப்பு நிதியாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சி 6.2 சதவிகிதமாக இருக்கும் என்றும் குறைத்து மதிப்பிட்டுள்ளது. இது முன்னர் 6.8 சதவிகிதமாக நிர்ணயித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதே நடப்பு நிதியாண்டில் இருக்கும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த, பல நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், இது அடுத்த நிதியாண்டில் இதன் எதிரொலி இருக்கலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
 

;