india

img

ஒரே நாளில் 2,73,810 பேருக்கு கொரோனா

நாட்டில் ஒரே நாளில் 2,73,810 பேருக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
சீனாவின் ஊகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா தொற்று இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை உச்சத்தை தொட்டுள்ளது.  இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. 
இந்த தகவலின்படி கடந்த 24 மணி நேரத்தில் 2,73,810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,50,61,919 உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1,619 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,78,769 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 1,44,178 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,29,53,821  ஆக உயர்ந்துள்ளது. 
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 19,29,329 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 
இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் நேற்று வரை 12,38,52,566 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

 

;