india

img

இந்தியா: 4.13 லட்சம் மக்கள் பிச்சையெடுக்கும் நாடு - மத்திய அரசு தகவல்

இந்தியாவில் 4.13லட்சம் மக்கள் பிச்சையெடுக்கின்றனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து நாடாளுமன்ற மேலவையில் மத்திய சமூக நீதி  அமைச்சர் தாவர் சந்த் கெலாட் இன்று எழுத்துப்பூர்வ முறையில்  அளித்துள்ள பதிலில், கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 4,13,670 பிச்சைக்காரர்கள் வசித்து வருகின்றனர்.
அவர்களில் ஆண்கள் 2,21,673 பேர்.  பெண்கள் 1,91,997 பேர்.  

மேற்கு வங்காளம் - 81,224 
உத்தர பிரதேசம் - 65,835 
ஆந்திர பிரதேசம் - 30,218 
பீகார்  - 29,723
மத்திய பிரதேசம் - 28,695
ராஜஸ்தான் - 25,853 
டெல்லி- 2,187
சண்டிகரில் - 121 
லட்சத்தீவில் - 2 
தாத்ரா நாகர் ஹாவேலி  - 19 
டாமன் மற்றும் டையூ - 22 
அந்தமான் நிகோபர் தீவுகள்- 56  பேரும் பிச்சைக்காரர்களாக உள்ளனர் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போது பிச்சையெடுக்கும் மக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

;