india

img

போராடும் விவசாயிகளின் 22 நாள் டிராக்டர்கள் அணிவகுப்பு - சம்யுக்த கிசான் மோர்ச்சா முடிவு

புதுதில்லி:
மேற்கு உத்தரப்பிரதேச மாநிலத்தில் மகா பஞ்சாயத்துக்களை  வெற்றிகரமாக நடத்திய சம்யுக்த கிசான் மோர்ச்சா இப்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் 16 மாவட்டங்களிலும், உத்தர்காண்ட் மாநிலத்தி லும், பாரதிய கிசான் யூனியன்பதாகையின்கீழ் டிராக்டர்  அணிவகுப்பை நடத்திடத் தீர்மானித் திருக்கிறது.பாரதிய கிசான் யூனியனின் கோட்டையாகத் திகழும் முசாபர்நகரிலிருந்து டிராக்டர் அணிவகுப்பு தொடங்குகிறது. இது மார்ச் 27 வரை நடைபெற்று, காசிபூர் எல்லையை அடைகிறது.

22 நாட்கள் நடைபெறும் இந்த அணிவகுப்பில் டிராக்டர்களுடன்  இதர வாகனங்களும் இடம்பெறுகின்றன. சுமார் 1400 கிலோ மீட்டர் தூரத்தை இந்த அணிவகுப்பு கடக்கிறது.அணிவகுப்பு செல்லும் பாதைகளில் போராடிக்கொண்டி ருக்கும் விவசாயிகள், போராட்டத்தின் முக்கியத்துவம் குறித்த சிறுபிரசுரங்களை மக்கள் மத்தியில் விநியோகம் செய்துகொண்டு வருவார் கள் என்றும் போராட்டக்குழுத் தலைவர்கள் தெரிவித்தார்கள்.ராம்ராஜ் என்னுமிடத்திலிருந்து மட்டும் 400க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் புறப்படுகின்றன. இத்துடன் மக்கள் தங்கள் டிராக்டர்களையும் இணைத்துக்கொண்டு அணிவகுப்பு பெரிதாகிக் கொண்டே செல்லும்.  இத்துடன் வரும் மார்ச்  10 அன்று கிழக்கு உத்தரப்பிர தேசத்தில் காசிபூர் மாவட்டத்தில் மகா பஞ்சாயத்து ஒன்று நடைபெறவிருக்கிறது.இதில் வாரணாசி, பிரயாக்ராஜ் கோட்டங்களிலிருந்து விவசாயிகள் வந்து கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. (ந.நி.)
 

;