india

img

கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசம்.... மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு....

புதுதில்லி:
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக போடப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்தார். 

உலகையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க நடைபெற்ற ஆராய்ச்சிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்தியாவில் இதுவரை எந்ததடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி
கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அதை மக்களிடம் எப்படி கொண்டு சேர்ப்பது என்பதற்கான ஒத்திகை ஜனவரி 2 அன்று தமிழகம் உட்படநாடு முழுவதும் நடைபெற்றது. கொரோனாதடுப்பூசியை குழப்பம் இன்றி விரைவாக கொண்டு சென்று மக்களுக்கு செலுத்துவதைஉறுதி செய்வதற்காக நாடு முழுவதும் இந்தஒத்திகை நடத்தப்பட்டது.

முன்னுரிமை அடிப்படையில் முதல்கட்டமாக 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு இலவச தடுப்பூசி போடத் திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜூலைமாதத்திற்குள் நாடு முழுவதும் 27 கோடிபேருக்கு இலவச தடுப்பூசி போட திட்டமிட்டுள் ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் தில்லியில் ஒரு மையத்தில்கொரோனா தடுப்பு மருந்து ஒத்திகையை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் சனிக்கிழமையன்று நேரில் பார்வையிட்டார்.பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கொரோனா தடுப்பூசி தில்லிமட்டுமின்றி நாடு முழுவதும் இலவசமாக போடப்படும். கொரோனா தடுப்பூசி தொடர்பாக திட்டமிட்டு பரப்பப்படும் புரளிகளை மக்கள் நம்ப வேண்டாம். கொரோனா தடுப்பு மருந்தின் பாதுகாப்பு மற்றும் செயல்
திறன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

;