india

img

பயோலாஜிக்கல் இ நிறுவனத்திற்கு 1500 கோடி முன்பணம் வழங்கிய மத்திய அரசு

30 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய பயோலாஜிக்கல் இ என்ற நிறுவனத்திற்கு 1,500 கோடி முன்பணத்தை மத்திய அரசு வழங்கி உள்ளது. 

இந்தியாவில் தற்போது கோவாக்சின், கோவிஷீல்டு மற்றும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹைதராபாத்தை சேர்ந்த பயோலாஜிக்கல் இ என்ற நிறுவனத்தின் கோவிட் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் 30 கோடி டோஸ் தடுப்பூசிகள் தயாரிக்க ரூ.1,500 கோடி முன்பணமும் மத்திய அரசு வழங்கியுள்ளது.

இந்த தடுப்பூசி ஒரு ஆர்.பி.டி புரத துணை அலகு தடுப்பூசி என்றும், தற்போது இந்த தடுப்பூசி 3-வது கட்ட மருத்துவ பரிசோதனை உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.   

மேலும் 2021 ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை பயோலாஜிக்கல் இ நிறுவனம் மூலம் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு சேகரிக்கப்படும் என்றும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் இரண்டாவது தடுப்பூசி இது என்பது குறிப்பிடத்தக்கது.

;