india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்..

20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிழக்கு ஆசியாவில் கொரோனா வைரஸ் தாக்கி உள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசின் கொடூரத் தாக்குதலால் கிழக்கு ஆசிய மக்களின் மரபணுக் கூறிலேயே மாற்றம் ஏற்பட்டுள்ளது. கிழக்கு ஆசியாவில் பல ஆண்டு கொரோனா வைரஸின் தாக்குதல் நீடித்து இருந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

                                  *****************

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்பெயின் அணி 5-3 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி கண்டது.

                                  ****************

ஒன்றிய அரசின் புதிய தகவல்-தொழில்நுட்ப விதிகளின் வரம்புக்குள் மின்னணு செய்தி  ஊடகங்களைக்கொண்டு வருவதற்குத் தடைவிதிக்க தில்லி உயர்நீதி மன்றம் மறுத்துள்ளது.

                                  *****************

தொழிலாளர்கள், தொழில் நிறுவனங்களின் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பை (12 சதவீதம்) ஒன்றிய அரசு செலுத்தும் திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் 31வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

                                  *****************

மும்பையில் முதன்முறையாக திருநங்கைகளுக் க்கான பள்ளிக்கூடம் திறக்கப்பட்டுள்ளது.

                                  *****************

பயன்பாட்டில் இருக்கும் கார்களின் முன் இருக்கைகளில் “ஏர்பேக்” வசதியை பொருத்தவதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31 வரை நீட்டித்து ஒன்றிய  சாலைபோக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

                                  *****************

குத்துச்சண்டை வீராங்கனைகள் சிம்ரன்ஜித் கௌர்,சோனியா சாஹல், வீரர் கௌரவ் சோலங்கி ஆகியோருக்கு அர்ஜுனா விருது வழங்குவதற்காக இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் பரிந்துரைத்துள்ளது.

                                  *****************

ககன்யான் திட்டத்திற்கு முன்னோட்டமாக வருகிறடிசம்பர் மாதம் ஆளில்லா ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

                                  *****************

சென்னை மெட்ரோ ரயில் பயண அட்டைகளின் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

;